பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/667

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

660 முருகவேள் திருமுறை (10-திருமுறை வியும். சிந்தாமணி 2754 இன்பம் .......மின்னின் ஒத்திருக்கும். சிந்தாமணி 1537 மின்னை ஒத்திலக.யமன் வந்தடிக்கும் ஒரு மட்கலம் தாயுமானவர் - சிற்சுகோ. 1. (2) விதியின் பயனிங்கு இதுவே.......மயிலேறிய வானவனே - அருளே - அருள்புரிவாயாக எனவும், பொருளே அருளே உண்மைப் பொருளை அருள்புரிவாயாக எனவும் கூட்டிப் பொருள் காணவும் இடமுளது. 28. பேரின்ப நிலை ஆனா அமுதே அயில்வேல்_அரசே சூர்ணா கரனே நவிலத் தகுமோ மாணாகிய என்னை விழுங்கி வெறுந் தானாய் நிலைநின்றதுதற் பரமே. (அந்) ஆனா அமுதே.ஞானாகரனே, யானாகிய...... தற்பரமே நவில்த் தகுமோ. o (பொ.உ) (ஆனா அமுதே) கெடுதலில்லாத அமுதன்ன சுவைப் பொருளே! (அயில்வேல்) கூரிய வேல் ஏந்திய அரசே! (ஞான ஆகரனே) ஞானத்துக்கு இருப்பிட மாணவனே! (iானாகிய என்னை) யான், யான் என்று ஆணவ நிலையிற் சொல்லும் என்னை (விழுங்கி) தன்னுட்துெள்ன்டு (வெறும் தானாய்) தனித்த பரமாய் எல்லாம் தானாகி (நிலை நின்றது) நிலைத்திருப்பதான (தற்பரம்) மேலான நிலையை இத்தன்ம்ையது என்று (நவிலத் தகுமோ) எடுத்து விளக்கிச் சொல்ல முடியுமோ - முடியாது என்றபடி (சு-உ) யான் என்பது அற்ற மேலான நிலை அனுபவத்தை இத்தன்மைத்து என்று சொல்ல இயலாது. (கு.உ.) (1) யான்-என்பது அற்ற நிலையின் அனுபவத்தை எடுத்துச் சொல்ல இயலாது. இதைச் சொல்லுகைக் கில்லையென்று எல்லாம் இழந்து சும்மா இருக்கும் எல்லை' என்றார் கந்தரலங்காரத்தில் (10): "அவ்வா றறிவார் அறிகின்றதலால் எவ்வா றொருவர்க் கிசைவிப்பதுவோ" என்றார் பின்னும் (அநுபூதி 30) (2) ஜீவபோதம் முனைந்து நிற்கையில் சிவபோதம் மறையும், சிவபேர்தம் முனைந்து நிற்கையில் ஜீவபோதம்