பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

composite key

297

composite video


குறிக்கிறது. கூட்டுக் கலவையான சமிக்கைகளிலிருந்து ஒரு படிமத்தை மீட்டெடுக்கும் திறனைக் குறிப்பிடுகிறது. கூட்டுருக் காட்சி கறுப்பு வெள்ளையாகவோ, வண்ணமாகவோ இருக்கலாம். சாதாரண கறுப்பு வெள்ளை அல்லது சிபநீ (RGB) வண்ணத்திரைகளைக் காட்டிலும் தெளிவற்றே இருக்கும். சிபநீ காட்சித் திரைகள் சிவப்பு, பச்சை, நீலம் ஆகிய நிறக் கூறுகளுக்குத் தனித்தனி சமிக்கைகளையும் தனித்தனி இணைப்புக் கம்பிகளையும் கொண்டுள்ளன. ஆனால் கூட்டுருக் காட்சித் திரைகள் ஒரே இணைப்புக் கம்பியிலேயே படிமத்தை உருவாக்குவதற்கான தரவு சமிக்கைகளையும், கிடைமட்ட மற்றும் செங்குத்து வருடல்களுக்கான துடிப்புத் தரவுகளையும் பெறுகின்றன.

composite key : கூட்டுத் திறவி : ஓர் அட்டவணையில் தரவுவைத் தேடிப் பெறப் பொதுவாக ஒரு குறிப்பிட்ட புலம் திறவு கோலாகப் பயன்படும். (எ-டு) பணியாளர்களின் விவரங்களைப் பதிந்து வைத்துள்ள அட்டவணையில் ஒரு குறிப்பிட்ட ஏட்டை (record) இனங்காண பணியாளர் எண் திறவுகோல் புலமாகப் பயன்பட முடியும். சில அட்டவணைகளில் ஒற்றைப் புலம் திறவு கோலாகப் பயன்பட முடியாது. பல்வேறு வணிகர்களிடம் கொள்முதல் செய்த பல்வேறு பொருள்களின் விவரங்கள் அடங்கிய பட்டியலில் ஒரு குறிப்பிட்ட ஏட்டினை (record) இனங்காண வணிகர் எண்+பொருள் எண் இரண்டு புலங்களும் சேர்ந்த கூட்டுத் திறவு கோலையே பயன்படுத்த முடியும்.

composite statement : கலவைக்கூற்று.

composite symbol : கலப்புக் குறியீடு : ஒரு குறிக்கு மேற்பட்ட குறிகளைக் கொண்ட சமிக்கை < > என்ற குறியீடு சமமானதல்ல என்பதைக் குறிப்பிடச் சில மென்பொருள் அமைப்புகளில் பயன்படுத்தப்படுகிறது.

composite video : கலவை ஒளிக்காட்சி; கலப்பு ஒளிக்காட்சி; கலந்த ஒளிக்காட்சி : ஒரு தனி ஒளிக்காட்சி சமிக்கையாக குறியீடு செய்யப்பட்டு பிரகாசம், நிறக்கூறு வடிவில் தோன்றும் ஒரு கணினியின் வண்ணக் காட்சித் திரையில் தோன்றும் நிற வெளிப்பாடு. நிறக் கட்டுப்பாடு சமிக்கை ஒரு தரவு தொடராக மூன்று நிறங்களில் (சிகப்பு, பச்சை, நீலம்) குறியீடு