பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/606

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

586

586

செருந்தி காலையே கனகம் மலர்கின்ற சாய்க்காடே - என்றார். "பருதியஞ் செல்வன் போல் நனையூழ்த்த செருந்தி'2 என்னும் கலித்தொடர் இதன் மஞ்சள் ஒளிகதிரவன் ஒளிபோன்றி ருப்பதைக் காட்டுகின்றது. இதுபோன்றே "ஒ ஸ்ளி ண | ச் செருந்தி' என இதன் ஒளி பாடப்பட்டது. இத்தொடர் இது கொத்தாகப் பூப்பதையும் குறிக்கின்றது.

இவ்வாறு குறிப்பன போன்றே செருந்தி, மஞ்சளாம் பொன்னிற ஒளியில், இதழ்கள் பொன்தகடுகள் போன்று நீண்ட காம்பில் கொத்தாகப் பூக்கும். செருந்திப் பூவால் வடிக்கப்படும் மருந்து நஞ்சைக் கட்டும் என்பது வள்ளலார் கண்டது.

இதன் பூவைப் பாவை என்றலும், அதனை மகளிர்க்கு உவமை கூறலும் மரபு” என்று உ. வே. சா. அவர்கள் குறித்துள்ளார்கள்?

‘பரதவர் தொடுப்பன வலைகள் சேய நீள்விழிப் பரத்தியர் தொடுப்பன செருந்தி’க் -எனச் சேக்கிழார் நெய்தல் நிலப் பெண்கள் தொடுப்பதைப் பாடினார். இதனாலும் இது குடும் பூவாகும். ஆழ்வார்கள் பலரும் இச்செருந்தியைப் பாடி யுள்ளார். 26. செவி சூடும் மலர். செயலை. - செயலை, பிண்டி, அசோகு என்பன ஒரு மரத்தின் பெயர்கள். மூன்றும் சங்க இலக்கியங்களில் உள்ளவை. இவற்றுள் பிண்டி வேறுபொருளையும் கொண்டது. அசோகு அக்காலத் தில் குறைந்த வழக்கு மேலும் இவ்விரண்டும் சமண சமயக் கடவுளுக்குரிதாக ஆளப்பட்டன. இவற்றால் செயலை என்னும் பெயர் இதற்குரிய முதன்மைப் பெயராகின்றது, - 1 ஞான, தே சாய்க்காடு : 9, 8 ஐங் : 18 குறிப்புரை, * கலி : 26 , 2. 4 பெரி : பு: திருக்குறிப்பு: 84