பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/644

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

622 தமிழ்நூல் தொகுப்புக் கலை அறுசீரடி யாசிரிய விருத்தம் “ஆபத்துக் குதவாப் பிள்ளை, அரும்பசிக் குதவா அன்னம், "தாபத்தைத்'தீராத் தண்ணீர், தரித்திரம் அறியாப் பெண்டிர், கோபத்தை அடக்கா வேந்தன், குருமொழி கொள்ளாச் சீடன் பாபத்தைத் தீராத் தீர்த்தம் பயனில்லை ஏழும் தாமே” என்பது முதல் பாட்டு, உரையும் உண்டு. நீதி சிந்தாமணி - வெள்ளைச் சிந்தாமணி என்னும் விவேக சிந்தாமணி ஆய்வு-அப்பன் செட்டியார். பாலாம்பிகை முத்திராசாலை. பவ-மாசி. 135 பாடல்கள். நூற்றெட்டுத் திருப்பதித் திருப்புகழ் h ஆசிரியர்: குரவை, இராமாதுச, தாசர். அச்சு: மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1917. நூற்றெட்டுத் 'திருமால் திருப்பதிகள் மேலும் பாடப்பெற்ற பாடல்களின் 'தொகுப்பு இது. நாடு வாரியாகக் காண்பாம்: சோழநாடு,40. பாண்டிய நாடு 18. மலைநாடு 13. நடு நாடு 2. தொண்டை நாடு 24. வடநாடு 11-ஆக 108 ஆகும். கைவத்தில் அருணகிரி நாதரின் திருப்புகழ் போல, வைணவத்தில் இந்தத் திருப்புகழ்த் திரட்டு உள்ளது. இந்நூலின் தொடக்கத்தில் தனியன் ஆக ஒரு நேரிசை வெண்பாவும்,அடுத்து, காப்பு என்னும் பெயரில் நம்மாழ்வார் துதியும் உள்ளன. ஒவ்வொரு திருப்புகழ்ப் பாடலின் தொடக்கத்திலும் அதன தன் சந்தக் குறிப்பு தரப்பட்டுள்ளது. ஒவ்வொரு பாடலின் இறுதி யிலும், அவ்வப் பதியின் பெருமாள் பெயரும் பிராட்டியார் பெயரும், அப்பதியைப் பாடிய ஆழ்வார்களின் பெயர்களும், அண்மையிலுள்ள புகைவண்டி நிலையப் பெயரும் தொலைவும்