பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/458

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

436 தமிழ் நூல் தொகுப்புக் கலை இந்நூலில், 112 பாடல்க்ள் கொண்ட பாயிரப் பகுதியும் ஒன்பது தந்திரங்களும் அடங்கியுள்ளன. மொத்தம் 3047 பாடல் கள் உள்ளன. பல நூல்களின் உரைகளில், 34 பாடல்கள், திரும்ந்திரப் பாடல்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. அவற் றையும் சேர்த்தால், 308 பாடல்கள் கொண்டது இந்நூல் என்பது போதரும். நாலாயிரம் பாடல்கட்கும் ஒரளவு குறைந்த ஒரு தொகை நூலை ‘நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் என்று கூறுவது போல், மூவாயிரம் பாடல்கட்கு மேலும் சில பாடல் கள் மிகுதியாக உள்ள இந்நூல் மூவாயிரம் பாடல்கள் கொண்டதாக முழுப் பெரிய எண்படுத்திக் கூறப்பட்டுள்ளது. இந்தச் சொச்சம்-மிச்சமாக உள்ள எண்ணை 'Round செய் தல்' என்று கூறுகிறார்களே - இதுபோன்றதுதான் அது. தண்டியலங்கார உரையாசிரியர், திருக்குறளை ஒரு தொகைநூல் என்று கூறுகிறார். இந்தக் கருத்தில் எனக்கு முழு உடன்பாடு இல்லை. திருக்குறளை யான் தொகுப்புக் கலை நூலில் சேர்த்துக் கொள்ளவில்லை. இது போலவே, திரு மந்திரத்தையும் ஒரு தொகை நூலாக யான் முழு மனத்துடன் ஒத்துக் கொள்ள முடியவில்லை. ஆயினும், இந்நூலுக்குத் திரு மந்திர மாலை' என்னும் பெயர் இருப்பதாக அறிஞர் சிலர் கூறுவதால், அரைமனத்துடன் தொகை நூல் வரிசையில் இதனையும் சேர்த்துக் கொண்டேன். மாலை என்பது, உதிரி கள் பலவற்றின் தொகுப்புதானே! திருமூலர் கயிலையிலிருந்து புறப்பட்டுப் பொதிய மலைக்குச் சென்ற ஒரு யோகி. வழியில் திருவாவடுதுறைப் பக்கம் - காவிரிக் கன்ரயில் உள்ள சாத்தனூர் என்னும் ஊரில் மூலன் என்னும் மாடு மேய்க்கும் இடையன் இறந்து கிடக்க, மாடுகள் கதறுவதைக் கண்டு பொறுக்க முடியாமல் அவன் உடலில் தன் உயிரைப் புகுத்தி (கூடுவிட்டுக் கூடு பாய்ந்து) தன் உடம்பை ஓரிடத்தில் மறைத்து வைத்து விட்டு மாடுகளை மகிழ்வித்து ஊருக்குள் ஒட்டிச் சென்று விட்டு வந்தார். பின், தன் சொந்த உடலைத் தேடியபோது அது இறைவன் அருளால் மறைக்கப் பட்டதால், இடை மூலனின் உடலுடனேயே திருமூலர் என் னும் பெயருடன் இருந்து, பல ஆண்டுகள் திருவாவடுதுறையில்