பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1396

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

subnet

1395

subscribe


subnet : கிளைப் பிணையம்;உட்பிணையம் : ஒரு பெரிய பிணையத் தின் அங்கமாக இருக்கும் இன்னொரு பிணையம்.

sub-notebook : சிறு கையேட்டுக் கணினி : குறைந்த எடையுள்ள கையேட்டுக் கணினி. கணினிகள் இலேசாக ஆகும்போது, கையேட்டுக் கணினிகள் 1 முதல் 2 கிலோக்களும் கையேடு 3 முதல் 4 வரை எடை கொண்டிருக்கும்.

subnotebook computer : சிறு கையேட்டுக் கணினி : வழக்கமான மடிக் கணினியைவிடச் சிறிய, எடை குறைந்த கையடக்கக் கணினி.

sub problems : உட் சிக்கல்கள்.

subprogramme : துணை நிரல் தொடர் : ஒரு குறிப்பிட்ட பணியைச் செய்யும் நிரல் தொடரின் ஒரு பகுதி. ஒரு குறிப்பிட்ட பணி துணை நிரல் தொடராகக் கையாளப்பட்டால் ஒரு இடத்திற்குமேல் அது தேவைப்படும் போது நிரல் தொடரமைக்கும் நேரத்தைக் குறைக்கும். ஒரே ஒருமுறை அதற்குக் குறியீடமைத்து நிரல்தொடர்களில் பல இடங்களில் அதைப் பயன் படுத்த முடியும். துணை நிரல் தொடர்களை அமைக்க துணை வாலாயங் களும், பணிகளும் பயன்படுத்தப்படலாம்.

subroutine : துணை வாலாயம்;உப செயல்முறை;துணை வழமை : அதற்குள்ளே ஆரம்ப இயக்கம். எப்போதும் துவக்கப்படாத துணை வாலாயம். பிற நிரல் தொடர்கள். குறிப்பாக முதன்மை நிரல் தொடர் அழைக்கும்போது மட்டும் இயக்கப்படும்.

subroutine reentry : துணை வாலாயம் திரும்பவரல்;துணை மறு நுழை : வேறொரு நிரல் தொடர் அதனை முடிக்கும் முன்பாக ஒரு நிரல் தொடரில், அதை ஆரம்பித்தல். கட்டுப்பாட்டு நிரல் தொடர் முன்னுரிமை குறிக்கீடுக்கு ஆளாகும்போது இது ஏற்படும்.

subschema : துணை அமைவு : ஒரு குறிப்பிட்ட நிரல் தொடருக்காக தேவைப்படும் தரவு தருக்க முறையில் ஒழுங்கு படுத்துதல்.

subscribe : உறுப்பினராகு;சந்தாதாரர் ஆகு : 1. செய்திக் குழுக்களின் பட்டியலில் ஒரு புதிய செய்திக்குழுவைச் சேர்த்தல். புதிய செய்திக்

குழுவிலிருந்து புதிய கட்டுரைகளை பயனாளர்கள் பெறுவர். 2. ஒரு அஞ்சல் பட்டியலில் அல்லது அது போன்ற சேவைகளில் பயனாளர் ஒருவர் உறுப்பினராதல்.