பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/531

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற்காலம் 509 தொகுப்பில் உள்ளன; காட்சி முதல் துதில் பிரிவு வரை யான துறைகளின் பேரில் உள்ளன. தொகுத்தவர் முதலிய விவரம் தெரிய வில்லை. - எண்,957. பல கோவைத் துறை (மூலம்) பல கோவை நூல்களிலிருந்து படியெடுக்கப்பட்ட சில பாடல்களின் தொகுப்பு இது. சிதைந்த நிலையில் உள்ள இந்தப் படியில் செய்யுட்கள் தெளிவாயில்லை. கலம்பகக் கொத்துகள் கலம்பகம் என்பது, பல பொருள்கள் பற்றி - பல அகத் துறைகள் பற்றி-பல வகையான நூறு பாடல்களால் இயற்றப் படும் ஒரு வகைச் சிற்றிலக்கியமாகும். கலம்பகம் என்பதற்கே பலவற்றின் தொகுப்பு என்பதான ஒரு வகைப் பொருள் கூறு வர். இத்தகைய கலம்பக நூல்கள் சிலவற்றின் தொகுப்பு 'கலம்பகக் கொத்து' எனப்படுகிறது. தமிழக அரசின் ஒலைச் சுவடி நூல் நிலையத்திலுள்ள (M.G.O.M.S.No.68) இதன் விவரம் வருமாறு: - மேற். பார்வை - வெளியீடு: தி.சந்திரசேகரன். Rathinam Press (Branch) Madras – 1, 1960. நூல்கள்: 1. பேரைக் கலம்பகம் -திருப்பேரைத் திருமால் மீது பாடியது. ஆசிரியர் பெயர் இல்லை. 2. திரு மயிலாசலக் கலம்பகம் - ஆசிரியர்: திருப்புகழ்ச் சுவாமி கள் எனப்படும் தண்டபாணி சுவாமிகள். 3. ஞான விநோதன் கலம்பகம் - சொருபானந்த சுவாமிகள் மீது, அவர் மாணாக்கர் தத்துவ ராயர் இயற்றியது. தி. சந்திரசேகரன், 1-3-60 நாளிட்டு ஆங்கிலத்திலும், 2-3-60 நாளிட்டுத் தமிழிலும் முகவுரை எழுதியுள்ளார். ஒலைச்சுவடி விவரமாவது: 1. திருப்பேரைக் கலம்பகம்-3419 எண்-காகிதக் கையெழுத் - துப் பிரதி. ஆதாரம்: 195-152 ஆம் ஆண்டளவில், மதுரைத்