பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/352

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

328 - தமிழ் நூல் தொகுப்புக் கலை இறுதிப் பத்தும் இழக்கப்பட்டன எனவும் எளிதில் அறிய முடிந் தது. மற்றும், பதிற்றுப் பத்தும் பாடல்களை வழி வழியாகச் செவி வழிக் கேட்டறிந்து வந்தவர்கட்கும் நூற்பெயர் தெரிந் திருக்கு மல்லவா? இவ்வாறாக, நூற்பெயரை அறிந்து கொள்ள இன்னும் எத்தனையோ வகைத் துணைகள் உண்டு. தொகுப்பு: . பதிற்றுப் பத்தின் இறுதிப் பகுதி கிடைக்காததால் நூலைத் தொகுத்தவர் பெயரும் தொகுப்பித்தவர் பெயரும் தெரிய வில்லை. இந்நூலின் பத்துப் பத்துக்களுமே பத்துச் சேரமன்னர் களைப் பற்றியதா யிருத்தலின், இந்நூலைச் சேர மன்னர் ஒருவர் தொகுப்பித்திருக்கலாம். பொதுவான அகத்திணை நாலாகிய ஐங்குறுதுறே யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை என்னும் சேரமன்னரால் தொகுக்கப்பட்டிருப் கும். போது, சேர மன்னர்களை பற்றிய இந்நூல் சேரமன்னர் ஒருவரால் தொகுக்கப்பட்டிருந்தால் வியப்படைவதற்கில்லை. இவ்வாறே, நூல் தொகுத்தவரும், சேர மன்னர்களோடு தெருங்கிய தொடர்புடைய சேரநாட்டுப் புலவர் ஒருவரா யிருக்கலாம். அல்லது தொகுத்தவரும் தொகுப்பித்தவரும் வேறு பிறராயும் இருக்கலாம். இஃது ஒர் உய்ந்துணர்வே யன்றி முற்றமுடிந்த முடியன்று. அடுத்து, - நூல் தொகுத்த முறை யாதாயிருக்கலாம் என்பது பற்றி ஆராய வேண்டுமே! நூல் தொகுத்தவருக்குப் பத்துப் பத்துக்களும் எவ்வாறு - எந்த உருவத்தில் கிடைத்திருக்கக்கூடும்? சொல்லி வைத் தாற் போல், பத்து மன்னர்களைப் பற்றி மட்டுமே - பத்துப் புலவர் மட்டுமே-பத்துப் பத்துப் பாடல்கள் வீதம் மட்டுமே எவ்வாறு பாடியிருக்க முடியும்? ஒரு வேளை, முன்கூட்டித் திட்டமிட்டே இவ்வாறு செய்யப் பட்டதா? தொகுப்பித்தவரும் தொகுத்தவரும் வேண்டிக் கொள்ள, பத்து மன்னர்கள்மேல் பத்துப் புலவர்களால் டப்பத்துப் பாடல் கள் பாடிக் கொடுக்கப்பட, இந்நூல் தொகுத்து உருவாக்கப்பட் டும் இருக்கலாம். இவ்வாறு நடந்திருப்பின், இந்தப் பத்துப் புலவர்களுள் ஒருவரே இந்நூலைத் தொகுக்கும் பணியையும்