பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

161


'முல்லைமுகை சொரிந்தாற்போன்ற இனிய பால் அடிசில் எனப் பசிச் சோற்றுக்கும், அதிலும் பாற் சோற்றுக்கு உவமை ஆயிற்று. நறுமணமும் திரு மணமும் முல்லை என்றாலே மணம் மூக்கைத் திறக்கும். இதன் சொல் மூலத்தில் முல்-முர்-முருகு என்னும் வளர்ச்சியைக் கண்டோம். முருகு என்றால் மணம். இவ்வகையில் முல்லைக்கு மணம் பிறவித் தொடர்புடையது. முல்லை மலர் அளவில் சிறியது. இதழ்கள் சில. மூன்று ஐந்து எண்ணிக்கையில் கொத்தாகப் பூக்கும். ஆயினும் தனித் தனி மலராகும். அளவில்தான் சிறியது. மணத்தில்...... 'சிறுவி முல்லை பெரிது கமழ் அலரி' என்றபடி பெரிதும் கமழ்வது. மணம் கமழ்வதில் பெருமை பெற்றது. அதிலும் பெரிதாகப் பெருமை பெற்றது முல்லைதான். இதன் மணப் பெருமையைப் பாவேந்தர் பாரதிதாசனார், "முகிழாத முன் மணக்கும் முல்லை மணமும்'2 -என்று தமது ஆர்வத்தையும் குழைத்துப் பாடினார். முல்லை மணம் கும்மென்றிருக்கும். இம்மணம் ஒர் இன்பக் கிளர்ச்சியைத் தருவது. காதல் உணர்வைக் கெல்லுவது. கவனத்தை வேறெங்கும் விடாது காமக் களிப்பில் மூழ்க வைப்பது. காமத்தை எழுப்புபவன் காமன் என உருவகம் செய்யப் பட்டான். காமனது கையம்புகள் ஐந்தில் முல்லை ஒன்றாக வைக்கப்பட்டது. இதன் மணத்தால் எழுந்த கருத்தொன்று மணக்கின்றது. முல்லை அரும்பும்; மங்கையும் காதல் அரும்பப் பெறுவாள். அது பூக்கும்; அவளும் பூப்படைவாள். அது மணக்கும்; அவளும் 1 சீவ, சி : 2628 2. முக்கட்பேறு : பாட்டி தாலாட்டு : 5

  1. 11