பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 47 மிகவும் வேகமாக ஓடி வந்தது என்பது தெரிந்தது. அவ்வாறு வண்டி தாங்கள் இருந்த இடத்தை நோக்கி வருவதைக் கண்ட அந்த முரட்டு மனிதர்கள், தாங்கள் மடத்திற்குப் போய்ச் சேருவதற்குள் அந்த வண்டி வந்துவிடும் ஆதலால், அப்போது ஷண்முகவடிவைத் துக்கிக் கொண்டுபோவது தவறு என்று நினைத்து சடக்கென்று ராஜபாட்டையை விட்டுத் திரும்பி வாய்க்காலுக்குள் இறங்கி அப்பால் போய் நின்றனர். அதற்குள் அந்த இரட்டை மாட்டுவண்டி அவர்கள் இருந்த இடத்திற்கு வந்து மேலும் போய் அவ்விடத்தில் இருந்த தாமரைக் குளத்தண்டையில் நின்றது. வண்டியில் ஒரே ஒரு மனிதரே இருந்ததாகத் தெரிந்தது. அவர் வண்டியை விட்டுக் கீழே இறங்கி, எருதுகளை மூக்கணையிலிருந்து அவிழ்த்து அவைகளைக் குளத்திற்குள் கொண்டுபோய்த் தண்ணிர் குடிக்கச் செய்து கொணர்ந்து மறுபடியும் வண்டியில் பூட்டி வண்டியை மேலும் ஒட்டிக்கொண்டு போக ஆயத்தமானார். மாடுகள் தண்ணீர் குடிக்க சுமார் ஐந்து நிமிஷ நேரம் கழிந்தது. அதற்குள் அவ்விடத்தில் தெய்வீகமாக ஒரு சம்பவம் நிகழ்ந்தது. ஷண்முகவடிவைத் தோளின்மீது வைத்தபடி வாய்க்காலிற்கு அப்பால் மறைந்து நின்ற முரடர்களுள் ஒருவன் மெதுவாகப் பதுங்கிப் பதுங்கி ராஜபாட்டைக்கு வந்து வண்டிபோய்விட்டதா என்று பார்த்துவிட்டு மறுபடியும் திரும் பிப் போய், - வண்டிக்காரன் வண்டியை அவிழ்த்துப் போட்டுவிட்டு எருதுகளுக்குத் தண்ணீர் காட்டிக்கொண்டிருக்கிறான் என்ற செய்தியை மற்ற முரடர்களிடம் தெரிவிக்க, வண்டிக்காரன் மறுபடியும் வண்டியைப் பூட்டிக் கொண்டு போக எவ்வளவு நேரம் பிடிக்குமோ என்று சந்தேகித்தவர்களாய்த்தங்களது தோள் மீதிருந்த பெண்சுமையை இன்னொரு தோளுக்கு மாற்றினர். அப்போது அந்தப் பெண்மணியின் உடம்பும் முகமும் குப்புறத் திரும் பி மறுபடியும் நிமிர்ந்தது. ஆகையால், அவளது வாயிலிருந்த துணிப் பந்து தற்செயலாக நழுவித் தரையில் வீழ்ந்துவிட்டது. ராஜபாட்டையில் ஏதோ ஒரு வண்டி go.g.ii-4