பக்கம்:மதன கல்யாணி-3.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 5 தோற்றத்திற்கு மிகுந்த மகிழ்ச்சி அடைந்தவர் போல நடித்து நலிந்த புன்னகை செய்தவராய் செட்டியாரை நோக்கி, "அப்படியா! தாங்கள் ஜெமீந்தாருடைய கூட்டாளியா! நிரம்பவும் சந்தோஷ மாயிற்று! தாங்கள் இந்த ஊருக்கு இன்றைய தினந்தான் வந்தீர்களோ?" என்றார். பசவண்ண செட்டியார்:- இல்லை, இல்லை. நான் இந்த ஊருக்கு வந்து நாலைந்து நாட்களாகின்றன. வந்தவுடனே இங்கே வந்து தங்களைப் பார்க்க முடியாமல் போய்விட்டது. ஏனென்றால், நான் இருப்பதற்கு வசதியான நல்ல ஒரு பங்களாவைச் சொந்தத்திலேயே வாங்க வேண்டும் என்பது என்னுடைய அவா. அதற்காக ஜெமீந் தார் சில தினங்களுக்கு முன்னாகவே அவருடைய நண்பரான வேறொருவருக்கு எழுதியிருந்தார். நான் இங்கே வந்தவுடனே அந்த மனிதரைப் பார்த்தேன். அதிர்ஷ்டவசமாக இந்தச் சந்தர்ப் பத்தில் இரு பங்களா விலைக்கு வந்தது. அதை நேற்றைய தினந் தான் வாங்கினேன். அதன் சம்பந்தமாக இரண்டு மூன்று நாட்களாக அலைந்து கொண்டிருந்தேன். அது ஒருவிதமாக முடிந்தவுடனே புறப்பட்டுத் தங்களைப் பார்க்க வந்தேன். வக்கீல்:- ஒகோ! அப்படியா நிரம்பவும் சந்தோஷம்! அந்த பங்களா எங்கே இருக்கிறது? செட்டியார்:- இந்த மைலாப்பூரிலே சான்தோமில் கட்ற்கரையின் மேல் இருக்கிறது. அது கால் மயில் நீளம் கால் மயில் அகலம் இருக்கிறது. அதன் பெயர் மனோகர விலாசம் என்று வாசலில் செதுக்கப்பட்டிருப்பதை நீங்கள் கூடப் பார்த்திருக்கலாம். வக்கீல்:- (பெரிதும் வியப்பும் சந்தோஷமு மடைந்து) அப்படியா சங்கதி! இந்த மனோகர விலாசத்தைத் தாங்களா வாங்கி இருக்கிறீர்கள்! நல்லதாயிற்று. எனக்கு மிகவும் சமீபத்திலேயே வந்துவிட்டிர்கள்! அது ஹதராபாத் சமஸ்தானத்து மந்திரியின் அரண்மனையல்லவா? அதன் விலை எழுபத்தைந்து லட்சம் என்றல்லவா சொல்லிக் கொண்டிருந்தார்கள். பேஷ்! பேஷ்! நல்ல பெரிய இடமாக டிாங்கி இருக்கிறீர்கள்! அப்படியானால் தாங்களும் பெருத்த கோடிசுவரர் என்றே நினைக்க வேண்டியிருக்கிறது. இப்படிப்பட்ட உண்மை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-3.pdf/9&oldid=853492" இலிருந்து மீள்விக்கப்பட்டது