பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/360

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

324


"இவனுக்குப் பனந்தார் கூறியது சேரமாற்கு உறவாதலின்’ ! என்றெழுதினார். பெருஞ்சேரல் இரும்பொறை என்னும் சேர மன்னனும் சேரர் வழிவந்த சிற்றரசன் அதியமானும் போரிட்டனர். அதுபோது இருவரும் போந்தையையே குடிப் பூவாகச் சூடினர். பாண்டியர் செருமாண் பஞ்சவர்' எனக் குறிக்கப்படுவர். ஒருகால் பாண்டிய மன்ன குலத்தவர் ஐவராகப் பிரிந்தனர். ஒருவர் முடிமன்னராக அமைய ஏனையவர் குறுநிலங்களை ஆண்டனர். பாண்டிய நாட்டைச் சேர்ந்த மோகூரை ஆண்ட குறுநில மன்னன் பழையன் மாறன். இவர்கள் யாவரும் வேப்பம் பூவையே குடிப் பூவாகக் கொண்டனர். எனவே, ஒரு குடியில், பெரு நில மன்னரானாலும் குறுநில மன்னரானாலும் குடிப் பூ ஒன்றாகவே இருந்தது. உறவினரானாலும் அப் பூ பகை கொள்ளினும் அப் பூ -எனக் குடிப் பூ மாற்றமின்றி ஏற்றம் பெற்றிருந்தது. - . . . . தனித்தனியே அவரவர் குடிப் பூ என்ற முறையிலும், பொதுவில் முடிப் பூ என்ற முறையிலும் மூன்றும் யாவராலும் மதித்துப் போற்றப்பட்டன. இவ்வாறு சிறப்பைப் பெற்ற மூன்றின் தன்மைகளைத் தனித் தனியே காண வேண்டும். ஆர்-ஆத்திப்பூ ஆர், ஆத்தியே h - : குடிகளில், முன்தோன்றி மூத்த குடியில் முதற் குடி சோழர் குடி சோழர்தம் குடிப் பூ ஆர். இஃது ஆத்தி' எனவும் பெயர் பெற்றது. தாதகி, ఫీ షీణి 飄盧鬍