பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/435

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

399


கண் கண்ட இப்பட்டறிவைக்கொண்டு இலக்கியக் கருத்து களை ஆய்ந்து முறைப்படுத்தி நோக்கியபோது நமது புலவர் பெருமக்களது இயற்கை இயலைப்பற்றிய நுண்ணறிவைக் கண்டு வியக்க நேர்ந்தது. காலம் பல கோலங்களை மாற்றியிருப்பினும் ஒரு சிறிதளவில் பருவ மாற்றம் ஒன்று தவிர மற்ற அனைத்து முனையிலும் இன்று கண்டு எழுதப்பட்டவைபோன்றே சங்ககாலப் புலவர்களது வண்ணனைகளும் உவமைகளும் விளக்கங்களும் விளங்குகின்றன. உள்ளத்தை வியப்பிலும் உவப்பிலும் ஆழ்த்தி" உணர்வுகளைப் பெற முடிகின்றது. எனவே, இவ்வாய்வு அகச்சான்றுகளுடன் புறச்சான்று களையும், நேரிற்கண்டு பெற்ற உணர்வார்ந்த அறிவையும் கருவி களாகக் கொண்டதாகும். நெஞ்சம் நிறைந்த பணியாகவும் அமைந்தது. இச்சிறப்பெல்லாம் கருதியே கபிலர் பெருந்தகை குறிஞ்சிப் பாட்டில் இப் பூவை முதற்கண் வைத்தார் எனலாம். - இதனை முதற்கண் வைத்துச் சிறப்பித்தது போன்றே இறுதிக்கண் வைத்து நிறைவு செய்வதும் ஒரு மேம்பாடு ஆகு மன்றோ? இம் மேம்பாட்டைப் பெற்ற பூ ஒன்று உண்டு. அஃது, எது? குறிஞ்சிப் பாட்டில் பூக்களது பட்டியலை நிறைவேற்றும் கபிலர், "மாயிரும் குருந்தும் வேங்கையும் பிறவும்"-என வேங்கைப் பூவை வைத்து நிறைவேற்றினார். இந்நிலையாலும் பிற பொருத் தங்களாலும் அடுத்து மேம்பட்டு நிற்கும் அறிமுக மலர், வேங்கைப் பூ.