பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 265 போயிருந்தது. நெடுங்காலமாக அன்னம் தண்ணிர் இல்லாமையாலும், நடந்த அலுப்பினாலும் அவளது பிராணன் அநேகமாக ஒடுங்கிப் போய்விட்டதாக நான் உடனே உணர்ந்து கொண்டேன். அரை பர்லாங்கு துரத்திற்கு அப்பால் வடவாறு என்ற ஒர் ஆறிருக்கிறது. அவளை அந்த இருளில் தனியாக அந்த இடத்தில் இருக்கவிட்டு நான் வடவாற்றுக்குப் போவது உசிதமாகத் தோன்றவில்லை. அப்படியே போனாலும், தண்ணிர் எடுத்துவர பாத்திரம் ஒன்றுமில்லை என்ன செய்கிறது! நான் கொஞ்சநேரம் யோசனை செய்து அவளைப் பார்த்து, 'அம்மா! இதோ வடவாற்றங்கரை ஒரு பர்லாங்கு தூரத்தில் இருக்கிறது. அதற்கப்புறம் என்னுடைய ஜாகைக்கு இன்னொரு பர்லாங்கு தூரம் போகவேண்டும். நான் கால் மைல் தூரம் போய் ப் பாத்திரம் சம்பாதித்து ஜலம் கொண்டு வருகிற வரையில், நீ இங்கே தனியாக இருப்பது பிசகு. நீ யெளவனப் பெண்ணாகவும் இருக்கிறாய். உன் உடம்பில் விலை உயர்ந்த ஆடை ஆபரணங்களும் இருக்கின்றன. ஆகையால், நீ மெதுவாக எழுந்து என் கையைப் பிடித்துக்கொண்டு நடந்து வந்தால், நான் உன்னை அழைத்துக் கொண்டு ஜலம் கொடுத்து என்னுடைய ஜாகையில் சேர்க்கிறேன். அவ்விடத்தில் நீ உடனே சாப்பிட்டு செளகரியமாகப் படுத்துக்கொண்டால், உன்னுடைய களை தீர்ந்து போகும்; என்ன சொல்லுகிறாய்?" என்றேன். அந்தப் பெண் எவ்வித மறுமொழியும் சொல்லமுடியாவிட்டாலும், என்னோடு வருவதற்காக எழுந்திருக்க முயன்று என்னைப் பிடித்துக்கொள்ள வேண்டுகிறவள் போலக் கைகளை நீட்டினாள். நான் கிட்ட நெருங்கி அவளுடைய கைகளைப் பிடித்து மெதுவாகத்துக்கி நிறுத்தினேன். அவளுடைய கண்கள் மூடியபடியே இருந்தன. அவள் உயிரற்றவள்போலத் துவண்டு துவண்டு அங்கும் இங்கும் சாய்கிறாள். அந்த நிலைமையில் நான் அவளைப் பிடித்து இரண்டோரடி நடத்த அவள் முற்றிலும் மயங்கிப் போய் பொத் தென்று கீழே விழுந்துவிட்டாள்.