பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/737

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

717


பலா என்பது இதன் முதற்பெயர். பலவு என்பது பலா வின் வளர்ச்சிச் சொல். ஆனால், சங்கப் பாடல்களில் பலாவை விடப் பலவே அதிகம் ஆட்சி பெற்றுள்ளது. இவற்றால், பலாமரம் பூத்துக் காய்ப்பதாகின்றது. இப் , "பலா மூசு எனப்படும். நுண்ணிய குழாய் வடிவ இதழ்கள் மொய்த்த கதிர்ப் பூ, குறிஞ்சி நிலத்தது. இளவேனிற் பருவத்தது. கருமஞ்சள் நிறத்தது. . இப் பூ மணங் கமழ்ந்தாலும் தனிப் பூவாக எடுத்துக் காண் டற்கு அரியது. கதிராகத் தொடுக்க இயலாது. எனவே குடும் பூ ஆக முடியாது. ஆனால், மாலையில் தொடுக்கப்பட்டது; பூவாக அன்று. பலாவின் சுளை பிற பூக்களுடன் மாலையாகத் தொடுக்கப்பட்ட அரிய செய்தியைத் திருத்தக்க தேவர் "சொன்ன நன் மலரும் அல்லனவும் விழ் பலவின் சுனளகளும் நன்மை நூலின் நயந்தோன்ற நன்பொன் விரல்'து தியினால் ... ... ... ... ... ... ...தொடுத்த கன் இனமாலையே' -எனப் பாடிக் காட்டினார். மேலே பூக்குழல்தான் சுளையாகும் எனக்கண்டோம். எனவே, சுளை மாலைக்கு ஆனமை, பூ, ஆனமை போன்றது எனலாம். இவ்வகையில் சுளை மாலையும் மூசு மலர் மாலை யாகின்றது. 9. வேளாண் விருது மலர், காவிதி. காவிதி என்றொரு பூ உண்டு. இப்பூ வடிவம் பொன்னால் செய்யப்பட்டு வேளாளரில் சான்றோர்க்கு விருதுச் சின்னமாக அரசரால் வழங்கப்பட்டது. அப்பட்டம் இப்பூவால் 'காவிதி' எனப்பட்டது. வேளாளர் தொடர்பில் இப் பூ செங்கழு நீர்ப் பூவாகலாம். இக்கருத்துகள் முன்னே (இந்நூற் பக்கம் 45, 46.) காணப்பட்டன. தொல்காப்பியத்தில் காவிதிப் பூ' என்று உரையாளரால் காட்டப்பட்டுள்ளது. இவையன்றி இப்பூ பற்றி வேறொன்றையும் அறிய இயலாததால் இங்கு இஃது அரிய மலராகின்றது. .தொல் : எழுத்து 153 உரை 2 2 165 هي بلدة جوي 1