பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/411

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

375


முன் காணப்பட்டமை போன்று இத்தோன்றி மேற்றோன்றி யாக மலர்வது இதழ்கள் குவியும் செயலாகும். இதன் ஆறு இதழ்களும் ஒரு குலையாகக் குவிவதை மதுரைக் குமரனார், 'குவி இணர்த் தோன்றி ஒண் பூ’! -என்றார். இதன் மேல் மலர்ச்சியைக் குவி' என்றமை இதன் இயல்பைக் காட்டுவதாகும். அடியிலிருந்து விரிந்து வந்த பூ மேல்நோக்கி குவியத் தொடங்கும் ஒரு முறை மாற்றத்தையே 'ஊழ்’ என்னும் சொல்லையமைத்து. 'ஊமுறு தோன்றி ஒண்துத் தளைவிட'? -எனப் பட்டது. இங்கும் "ஒண் பூ என்று குறிக்கப்பட்டது. இவ்வொளி யும், எரியும் தி போன்ற ஒளியாகும். இதனால்தான், 'எரிமருள் தோன்றி (அகம் : 218 : 20) தாய தோன்றி தியென மலரா' (பரி 11, 21) "திவாய்த் தோன்றி” (பெருங் : 2: 12 : 26) -என்றெல்லாம் கபிலராலும் நல்லந்துவனாராலும் கொங்கு வேளிராலும் பாடப்பட்டது. ஒவ்வொரு இதழும் ஒவ்வொரு சுடராகத் தோன்றும் என்பதை, கடற் புரை தோன்றி" (அகம் : 364 : 6) என்பதனாலும் அறியலாம். சுடர் என்னுஞ்சொல் எரியும் விளக்கின் திரிச்சுடருக் கும் உரிய சொல். இதற்கொப்ப ஒவ்வொரு இதழும் ஒவ்வொரு விளக்குத் திரியாகும். ஐந்து திரிகொண்டு ஐந்து முகமாக எரியும் விளக்கைக் குத்துவிளக்கு’, ‘ஐந்துமுக விளக்கு’ என்போம். இஃது ஆறுமுகவிளக்கு. ஆறுமுக அகல் விளக்காக, "... ... ... ஆய் இதழ்த் தோன்றி . . .” சுடர்கொள் அகலின் சுருங்குயினி அவிழ’ - எனப்பட் டது. இங்கு 'சுருங்குயினி அவிழ’ என்றது அதன் அரும்பு விரி யும் நிலையைக் குறிக்கும். இவ்வாறு புதரில் பூத்துத் தோன்றிய தோன்றியைக் கண்ட சேகம்பூதனார், தோன்றி தோன்றுபு புதல் விளக்கு உராஅ 4 என்றார். 1. குறு . 107 : 1. 8 அகம் : 235 : 8, 9, or 2 அகம் : 217 10 4 நற் : 69 : 8,