பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/327

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

291


இது கார்ப்பருவப் பூ. பூவை நாம் பார்ப்பதற்கு முன்னர் இதன் மேல் நண்டு, கண்கள் கொண்டு நம்மைப் பார்க்கும். மயில் காலின்மேல் நண்டுக் கண்கள் போன்று நொச்சியின் அரும்புகள் தோன்றும். "அலவன் (நண்டு) கண்ணேய்ப்ப அரும்பு கன்று அவிழ்ந்த கருங்குலை நொச்சி'1 -என மதுரைக் கண்ணங் கூத்தனார் அரும்புக்கு தண்டின் கண்ணை உவமை கூற, கபிலரும் மாற்றுப் பாங்கில், 'நொச்சி மா அரும்பன்ன கண்ண எக்கர் ஞெண்டு'2 -என நண்டின் கண்ணிற்கு நொச்சி அரும்பை உவமை கூறினார். நண்டின் கண் சிறியதாக வெளியே நீண்டிருப்பது போன்று இதன் அரும்பு சிறியது. கருப்புப் பூ நண்டின் கண் கரு நிறங்கொண்டது. அதுபோன்றே அரும்பும் கருமை நிறங்கொண்டது. 'நொச்சி மா அரும்பு’’ என்றதில் உள்ள 'மா' என்னும் அடைமொழி கருமையைக் குறிப்பது. இதன் மலரும் மா மலர் - கருநிற மலர். இன்றும் நமது கொல்லைகளில் நொச்சி உள்ளது. அதன் பூவின் கருமை நிறத்தையும் பார்க்கின்றோம். அதனை இலக்கியம் காட்டப் பார்ப்பதில் ஒரு தனி உவகை உண்டு. - திருத்தக்க தேவர் வீர வாளை விளக்க நினைத்தார். அதன் ஒளி திகழும் கருநிறத்தைக் கூற உவமை தேடினார். 'நொச்சி மாமவர் நிறத்தன”3 என நொச்சிப் பூவின் ஒளி விடும் கரு நிறத்தைக் காட்டினார். கருமை எனின் எத்தகைய கருமை? 1. கார். நா 89 : 1, 2 2 நற் : 287 : 1, 2 8 ?வ, சி : 21.88