பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/397

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

361


பட்டதே இதற்குச் சான்றாகும். பற்றை என்னும் சொல் வழக்கு இலக்கியத்தில் இல்லாமையும் பிற்காலத்தோரால் படைக்கப்பட்டி ருப்பதும் இவ்வாறு கருத இடந்தருகின்றது. எனவே, பற்றை" என்னும் பெயரைப் பூவிற்குக் கொள்ள வேண்டும். இதுவரை காணப்பட்ட இதன் பல பெயர்களுள் இலக்கியங் களில் மிகுதியும் இடம் பெற்ற பெயர்கள். காந்தள், தோன்றி, கோடல்-என்னும் மூன்றுமேயாகும். இம்மூன்றில் 'காந்தள் என்பதன் மறு பெயர்களாகவே மற்றைய இரண்டும் குறிக்கப்படினும். இரண்டும் இதன் வகைகளே யாகும். இலக்கிய வழக்கைக் கொண்டு நோக்கின் மற்றொரு கருத்து எழுகின்றது. இம்மூன்று பெயர்களும் சொல்லளவில் மட்டும் வேறுபாடுடையனவா? மலர் அளவிலும் வேறுபட்டனவா? அஃதாவது காந்தள் ஒன்றா? அதன் வகையால் இரண்டா? அன்றி மூன்றா? ஒன்றில் மூன்றா? மூன்றும் ஒன்றா? நிகண்டுகள் காந்தளின் மறுபெயர்களாகத் தோன்றியையும் கோடலையும் கூறுகின்றன. ஆனால், நப்பண்ணனார் என்னும் சங்கப் புலவரோ தமது ஒரு பாட்டிற்குள்ளேயே, "கைபோற் பூத்த கமழ்குலைக் காந்தள், உருவமிகு தோன்றி" என்று காந்தளையும் தோன்றியை யும் தனித்தனியே கூறி வேறு வேறு மலர்களாகக் கொள்ள வைத் துள்ளார்: கேசவனாரும் நல்லந்துவனாரும் இவ்வாறு இரண்டை யும் வெவ்வேறாகக் காட்டினர். "கோடற் குவிமுகை அங்கை அவிழத் தோடார் தோன்றி குருதி பூப்ப’ 2 -என்று நப்பூதனாரும், AASAASAASAASAA 1. பரி ; 19 : 76, 78 - 14 : 18 - 18; 11 ; - 20, 21, 2 gos), ur : 95, 96.