பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/367

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

331

இம்மரத்தின் கிளைக்கொப்புகளின் காம்பில் சிறு சிறு பசிய மொட்டுகள் தோன்றும், மேல் வரிசையாக மாறி மாறி அமைந் திருக்கும். இம்முகைகளின் உருவம் ஒரு நெல் அளவினது. மூக்கு வளைந்த நெல் என்னும்படி காம்புப் பக்கம் சிறிது வளைந்திருக்கும். பசுமையாக மூடியிருக்கும் புறவிதழ் ஒன்று விரியும். அதனுள் ளிருந்து பத்துப் பன்னிரண்டு எண்ணிக்கையில் மகரம் வெண்மை நிறத்தில் தோன்றும். வெண்மைநிறம் மங்கிய மஞ்சளாக மாறும். பசிய புறஇதழும் மஞ்சளான அல்லியும் கொண்ட மலர். அகவிதழ்கள் தோன்றா. மார்கழி முதல் சித்திரைவரை பூக்கும். இரண்டு நாள் அளவில் உதிர்ந்துவிடும். இவைகளால், இம் மரக் கிளைகளில் தோன்றும் இப் பூ, கோட்டுப் பூ, பனிப் பருவப் பூ , மங்கலான மஞ்சள் நிறங்கொண்டது. முல்லை திரிந்த சுரத்தில் மண்டியதால் பாலை . وی ل55ut இப் பூமரப் பெயரில் திகழ்வது ஆர்க்காடு. ஆர்க்காடு ஆர், ஆத்தியாக, காடு அடை மொழி பெற்றுக் காட் டாத்திப் பெயர் பெற்றது அன்றோ? ஆர் செறிந்திருந்த ஆர்க் காடு இரு மாவட்டங்களாக இன்று குறிப்பிடும் அளவில் பெரும் பரப்பாக இருந்தமை புலனாகின்றது. மாவட்டப் பெயரோடு ஆர்க்காடு என்று ஒர் ஊரும் விளங்குகின்றது. ஆர்க்காட்டைத் தலைநகராகக்கொண்டு முற்காலத்தில் சோழகுலக் குறுநில மன்னர் ஆண்டனர். "படுமணி யானைப் பசும்பூண் சோழன் கொடி நுடங்கு மறுகின் ஆர்க்காடு'! -என்னும் தேவனார் பாடல் இவ்வூர் சோழரது ஊராக விளங்கியதையும், புலிக்