பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/596

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

576


வளர்வதைக் காட்டுகின்றன. ஆங்குள்ள இற்றி மரத்தின்மேலும் பற்றிப்படரும் ! . இது புதராகத் தோன்றும், அதிலும் செறிந்த புதராக முள்ளம் பன்றி பதுங்கியிருக்கும் அளவில் செறிந்த புதராகும்.? இதன் இலை குறிப்பிடத்தக்கது. 'பரு இலைக் குளவி என்னும் படி பெரிய அளவினது. நல்ல பச்சை நிறங்கொண்டது. அடர்ந்து தழைப்பது; தண்ணென்று குளிர்ச்சி தரும். இதனை மூவாதியர், 'இலையடர் தண்குளவி ஏய்ந்த பொதும்பர்' -எனப் பொதும்பராகக் குறித்தார். இது போன்று, இதன் இலை செறிந்திருப்பதை, 'அடை (இலை) மல்கு குளவியொடு கமழுஞ் சாரல்’4 என்று அறிவிக்கும் அடியில் சாரல் என்னுஞ் சொல் இதன் இடம் மலைச்சாரல் என்று அறிவிக்கின்றது. ஆம், இது மலைநிலப்பூ. "வள்ளிதழ் குளவியும் குறிஞ்சியும் குழைய' (மலை : 335) “பெருந்தண் கொல்லிச் சிறுபசுங் குளவி (நற் : 346 : 9) - என்னும் அடிகளோடு குளவி அமைந்த பாடல்கள் குறிஞ்சித் திணைப்பாடல்களாக அமைந்தமையும், களிறும் குரங்கும் இதன் மேற் படுத்தும், இதனைத் தின்றும் குழைத்தும் பயன்படுத்தியமை யும் இது மலைநிலப் பூ என்பதைக் காட்டுகின்றன. பச்சைப் பசேலென்றிருக்கும் இதன் செறிந்த இலைகளின் அடித்தொடர்புடனே இம்மலர் தோன்றும் இதன் புறவிதழ்கள் பசுமை நிறத்தன. இம்மலரின் அகவிதழ் வெண்மையானதாயினும் இலைப்பசுமையும், புறவிதழ்ப் பசுமையும், அகவிதழின் புறத் தோற்றமும் இலைப்பச்சைப் பாங்கிலேயே அமைந்தவை. இதனால், இது 'மலைப் பச்சை எனப்பட்டது. புறநானூற்று உரைகாரர். இதற்கு மலைமல்லிகை என்றே உரை வகுத்தார்.3 நிகண்டுகளில் திவாகரமும் சூடாமணியும் 'மலைப்பச்சை' என்றே, குறித்தன. இடைக்காலத்தோர் குளவியை மலைப்பச்சை என்றே வழங்கினர் ஆனால், ໘ ບໍ່ 2 7 9 1, 2, 4 புறம் , 90 1, 2. 2 அகம் 182 : 6-8, 5 புறம் . 168 : 1.2 உரை, 8 ஐக் எ : 8, ! - . . . . .