பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120


உள்ள சிறுவேறுபாடுகளைக் காட்டுபவை. தமிழ்ச்சொல்லின் வளத்தை மட்டுமன்று, "எல்லாச் சொல்லும் பொருள் குறித் தனவே'21.2 என்றபடி தனிப்பொருள் காட்டும் சிறப்புடையது என்பதற்கும் இவற்றைக் கொள்ளலாம். ஒரு ஒழுங்கில்லாமல் மேலும் கீழுமாக அமைந்தது கொத்து. தலைகீழாகத் தொங்குவது தொத்து. துண்ணென்று வெடித்துப் பூக்கும் தொகுதி துணா. ஒழுங்குடன் நெருக்கமாக அமைந்தது இனர். மிகச் செறிவாகத் துய்வான பூக்களைக்கொண்டது மஞ்சரி, தொடர்ந்து மேல்நோக்கியோ பக்கவாட்டிலோ பூப்பது தொடர்ச்சி ஒருவகை இனத்தொகுப்பு குலை_எனப்படும். நெய்தல் "மணிக் குலை கட் கமழ் நெய்தல்' 218 எனப்பட்டது. இச்சொற்களுக்கேற்பச் சில இச்சொற்களையே தம் பெயர்களாகக் கொண்டவையும் உள. நாயுருவிக்கு மஞ்சரி’ என்று பெயர். 'மஞ்சரிப்பா' என்றொரு நூல்வகையே உண்டு. அலரி வகை ஒன்றிற்குக் கொத்தலரி என்று பெயர். 'துணரி என் றொன்றிற்குப் பெயர். தாழை தனிப்பூ என்றாலும் இதன் மடல்கள் அடுக்கடுக்காக உள்ளமை கொண்டு அதற்கும் 'இணர் அடைமொழி கொடுத்து வால் இனர்மடல் தாழை' 2.14 என்றனர். ஆவிரை ஒரு கொத்து இனம். அதனில் இத்துணை வகை களும் அமைந்துள்ளன. தொடுக்காத தொடையல்கள் நான் கொத்தாகப் பூப்பேன் என்பது மட்டும் அன்று; இயற்கையிலே கோதையாகவே பூப்பேன். கட்டாமலே கண்ணி யாகக் காட்சி தருவேன். தொடுக்காமலே மாலையாக மலர்வேன். கொத்தான அமைப்பில் ஒர் ஒழுங்குடன் தொடர்ந்து அமைந்து காட்சி தருவேன். வரிசையாகவும் மேலிருந்து கீழாகத் தொங்கும் நிலையிலும் வர வரச் சிறுத்த பூக்களைக் கொண்டும் இயற்கை 212 தொல்: சொல் : 1.55, 214 பட். பா ; 118, 218 குறி. பா : 84. - w - . .