பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/447

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

427


கண்ணகியார் தொடர்பில் வேங்கை தெய்வத் தொடர்புடையதt கின்றது. ஒன்றை இங்கே நோக்கத்திற்கொள்ளலாம்.கண்ணகியார் வரலாற்றிற்குப் பின்னர் அவரோடு தொடர்புடைய பல நிகழ்ச்சி கள் தமிழ்நாட்டார்க்கு வாழ்வியல் மரபுகள் ஆயின. அவ்வகையில் இவ்வேங்கையும் மதிக்கத்தக்க ஒன்றாயிருக்கும். அதனால், வண்டு மூசாது என்னும் எண்ணம் எழுந்தது. சங்க இலக்கியங் கள் வேங்கையில் வண்டு படியாததாகக் காட்டவில்லை. இது கொண்டு நோக்கினும் சங்க காலத்திற்குப் பின்னர் இந்நம்பிக்கை எழுந்திருக்கலாம் என்று கொள்ளலாம். இதன் தொடர்பில் மற்றொன்றை இங்கு நினைவு கூற வேண்டும். வேங்கைப் பூவிற்கு நிறத்தையும் மனத்தையும் தாதையும் குறித்திருப்பது போன்று தேனைக் கொண்டிருப்பது பற்றிச் சிறப்பான குறிப்பு ஏதும் இல்லை. ஆயினும் வண்டு படிந்ததாகப் பல இடங்கள் உள்ளமை வேங்கை வண்டு மூசும் மலர்தான் என்பதை உறுதிப்படுத்துகின்றன. & o தாளும் தித்தியும் இவ்வேங்கைப் பூவின் தாதுத் தூள் பொன் நிறமானது. மலர் மங்கையர் சுணங்கிற்கு உவமையானது போன்று இத்தாது அவர்தம் தித்தி’க்கு உவமையாயிற்று. தித்தி என்பது சுணங்கு போன்று ஒர் அழகுத் தேமல், சுணங்கு இதழ்கள் விரிந்த மலர் போன்று அகன்று படரும், 'தித்தி' என்பது புள்ளிகளாகத் தோன்றும். சுணங்கு மார்பிடங்களில் படரும். தித்தி உடலில் எங்கும் பலபுள்ளியாகத் தோன்றும். இத்தித்தி, “.......... “...“ நெடுந்தால் வேங்கை அம்பூந் தாது உக்கன்ன துண்பல் தித்தி' என வேங்கைத் தாது உதிர்ந்தது போன்றது. தித்திக்கு உவமையான இத்தாதை மகளிர் பொன் னிற அழகு கருதித் தம் மார்பிடங்களில் "விரிமலர் வேங்கை நுண் தாது அப்பிக்” க் கொண்டு காட்சிக்குரியவராகுவர். 1 நற் : 157 : S-10 2 திருமுருகு : 86.