பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/334

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

J22 பூர்ணசந்திரோதயம்-2 காதலியான ஷண்முகவடிவைப்பற்றிய நினைவில் ஆழ்ந்திருந்து, காகிதத்தையும் பென்சிலையும் எடுத்து வைத்துக் கொண்டு அவளுக்குக் கடிதம் எழுதத் தொடங்கித் தான் வந்தது முதல் நடந்த வரலாறுகளை எல்லாம் ஒன்றுவிடாமல் விரிவாக எழுதித் தனது மனதையும், மட்டற்ற காதலையும், அளவிட இயலாத வாத்சல்யத்தையும் அந்தக் கடிதத்தில் அப்படியே பெயர்த்துத் தத்ரூபமாக வைத்து அனுப்புகிறவன் போல, அவ்வளவு அபாரமான உருக்கத்தோடும் வாஞ்சை யோடும் விஷயங்களை அவளுக்கு எடுத்துக்காட்டி எழுதி கடிதத்தை முடித்து வைத்துவிட்டு அதற்குமேல் தனது சயனத்தை நாடினான். அவர்கள் தங்கிய சத்திரம் பிரயாணிகளின் செளகரியத்தைக் கருதி சிறிய சிறிய விடுதிகளாகத் தடுக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு விடுதியிலும் இரண்டு பேர் வசதியாகப் படுக்க இடம் இருந்தது. ஆகவே, நமது பிரயாணிகள் சத்திரத்தின் மணியக்காரரிடம் கேட்டுத் தங்களுக்கு மூன்று விடுதிகள் எடுத்துக் கொண்டிருந்தனர். ஒரு விடுதியில் முத்துலக மியும் அபிராமியும் சயனித்துக் கொண்டனர். அதற்குப் பக்கத்தில் இருந்த இரண்டாவது விடுதியில் அம்மாளுவும் தனமும் சயனித்துக் கொண்டனர். மூன்றாவது விடுதியில் கலியான சுந்தரம் சயனித்துக் கொண்டான். இரண்டு தினங்கள் தொடர்ச்சியாக அவர்கள் வண்டியில் பிரயாணம் செய்து வந்தவர்கள் ஆதலால், அவர்களது உடம்புகள் புண்பட்டு அலுத்துப்போயிருந்தன. ஆகவே, அவர்கள் அன்றைய தினம் இரவில் மெய்மறந்த நித்திரையில் ஆழ்ந்துவிட்டார்கள். அந்த இரவு கழிந்தது. மறுநாட்காலை ஏழு மணிசமயம் இருக்கலாம். அம்மாளு தனம் ஆகிய இருவரும் மற்றவர்களுக்கு முன்னால் அதிகாலையிலேயே எழுந்து, தங்களது காலைக் கடன்களை முடித்துக் கொண்டு மற்றவர்களது வருகையை எதிர்பார்த்த வர்களாய்த் தங்களது விடுதியில் இருந்தபடி ஒருவர்க்கொருவர்