பக்கம்:மதன கல்யாணி-3.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 மதனகல்யாணி கல்யாணியம்மாள். நீ இங்கே தோட்ட வேலை செய்கிறவனா? ஆள்:- ஆமாங்க நான் தோட்டவேலெயும் சேஞ்சுக்கணும் காவலும் காத்துக்கணும். கல்யாணியம்மாள்:- கலியானம் செய்தவர்கள் யார் என்பதும் அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பதும் உனக்குத் தெரியுமா? தோட்டக்காரன்:- தெரியாதுங்க. கல்யாணியம்மாள்:- இந்த பங்களாவினுடைய சொந்தக்காரர் எங்கே இருக்கிறார்? தோட்டக்காரன்:- அவுரு ஒரு வக்கீலைய்யா அவரோடெ பேரு சம்பந்த முதலியாரு, அவுரு இருக்கறது வண்ணாரப்பேட்டை. கல்யாணியம்மாள்:- சரி; அதிருக்கட்டும். நாங்கள் தேனாம்பேட் டைக்குப் போக வேண்டும் இங்கே வாடகை வண்டி ஏதாவது நடக்குமா? தோட்டக்காரன்:- ஏதுங்க? இது ஒரு அத்துவானக் காடு. இஞ்சே வண்டி கிண்டி ஒண்ணும் அம்பிடாதுங்க - என்றான். இதைக் கேட்ட கல்யாணியம்மாள் சிறிது நேரம் யோசனை செய்த பின்னர் அவனை நோக்கி, "அப்பா அடெ! நீ எங்களுக்கு ஒர் உபகாரம் செய்கிறாயா? செய்தால், உனக்கு சரியானபடி இனாம் கொடுக்கிறோம்" என்று நயமாகக் கூறினாள். தோட்டக்காரன், "ஒ செய்யறேனுங்க: என்ன ஆவனும் சொல்லுங்க" என்று மிகுந்த உற்சாகத்தோடு கேட்க, கல்யாணியம் மாள், "நாங்கள் தேனாம்பேட்டைக்குப் போக வேண்டும். அதற்கு ஒரு வண்டி வேண்டியிருக்கிறது. நீ உடனே புறப்பட்டுத் தேனாம் பேட்டைக்குப் போ. அப்படிப் போகும் போது வழியில் ஏதாவது வாடகை வண்டி அகப்படுமானால், அதையே அழைத்துக் கொண்டு வா. அகப்படாவிட்டால், தேனாம்பேட்டையில் உள்ள மாரமங்கலம் சமஸ்தானத்து பங்களா எங்கே இருக்கிறதென்று விசாரித்துக் கொண்டு அங்கே போய், பங்களாவிலிருக்கும் ஆள் களைக் கண்டு, "உங்களுடைய எஜமானியம்மாள் அடையாற்றில் இருக்கிறார்கள்; உடனே ஒரு பெட்டி வண்டி கொண்டு வரச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-3.pdf/56&oldid=853455" இலிருந்து மீள்விக்கப்பட்டது