பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் さ7 நிமிஷ நேரம் கழிந்தது. வெளிப்பக்கத்தில் ஒசையின்றி வந்த சன்னியாசி வெளித் தாழ்ப்பாளை மெதுவாக விலக்கிய ஓசை மிகவும் சொற்பமாகக் கேட்டது. உடனே சாமியார் கதவை மெதுவாகத் தட்டியவண்ணம், 'அம்மா ஷண்முக வடிவு! தாழ்ப்பாளைத் திற!' என்று அன்பாகவும் மரியாதையாகவும் அழைக்க, அந்த ஓசையைக்கேட்ட பெண்மணியின் உடம்பு கிடுகிடென்று ஆடியது. அவளது உயிரில் முக்கால் பாகமும் போய்விட்டது. நடைப்பிணம் போலக் காணப்பட்ட அந்தப் பெண்மணி உடனே சடக் கென்று கதவை இழுத்து அதை முழுதும் நன்றாகத் திறந்து வைத்தாள். உட்புறம் முழுதும் இருள் நிறைந்திருந்ததையும், கதவின் உட்புறத் தாழ்ப்பாள் விலக்கப் பட்டே இருந்ததையும், ஷண்முகவடிவு கதவண்டையில் வந்து ஆயத்தமாக நின்றதையும் கண்டு மிகுந்த பிரமிப்பும் கலக்கமும் அடைந்தார்; அந்தப் பெண்பாவை தாங்கள் பேசிய விவரங்களை எல்லாம் அறிந்துகொண்டு வெளியில் போக எத்தனித்திருப்பாளோ என்ற எண்ணம் கொண்டார். ஆனாலும், அந்த இருளில் அவள் இரண்டாங்கட்டின் கடைசிவரையில் போய், வெளிப் பக்கத்தில் பேசப்பட்டதைக் கேட்டிருக்க சாத்தியப்பட்டிருக்காது என்ற நினைவைக் கொண்டவராய் உள்ளே நுழைந்து கதவை மூட முயன்றவராய், 'அம்மா! குழந்தாய் கதவை நன்றாகத் திறந்து வைக்காதே. இருளில் யாராவது திருடர் உள்ளே நுழைந்தாலும் நுழைந்து விடுவார்கள். என்னைப் பற்றி நான் கொஞ்சமும் பயப்பட வில்லை; உன்னைப்பற்றித்தான் நான் நிரம்பவும் கவலைப்படு கிறேன். நான் போகும்போது விளக்கைக் கொளுத்தி வைத்து விட்டுப் போனேனே. அது எப்படி அணைந்து போயிற்று? நீ நிற்கிறாயே, அதற்கு அநுசரணையாக நான் திரும்பி வருவதற்கும் கொஞ்சம் தாமசமாகி விட்டதே. ஐயோ பாவம்! உனக்கு என்னென்ன இடைஞ்சல்கள் உண்டாகின்றன பார்த்தாயா?" என்று கூறிய வண்ணம் கதவை மூட முயன்றார்.