பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/464

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

444


கன்னி கார் நறுங் கொன்றை' -எனக் கண்ணியாக் மட்டும் அன்று: "வண்ண மார்பில் தாரும் கொன்றை'யாக அமைந்தது. இரண்டுடன், ........ கொன்றைப் பொன்னேர் புதுமலர் தாான் மாலையன் ததைந்த கண்ணியன்’ ஆனார். சங்க இலக்கியங்களில் சிவபெருமானை வாழ்த்தும் பாடல் களிலெல்லாம் கொன்றை சுட்டப்படும். கொன்றையின் மதிப்பு சிவபெருமானின் மதிப்பாகவே அடியார்களால் கருதப்பட்டது. பாரதக் கதையில் அபிமன்னியு போர். சூழப்பட்டு நிற்கும் அபி மன்னியுவிற்காக வீமன் புகுந்தான். அவனைத் தடுக்க நினைத்த சயத்திரதன் சிவனிடம் பெற்ற கொன்றையை வீமன் எதிரே ஏவினான். வீமன் "கொன்றைத் தொடை மாலை கண்டளவில் கை தொழுது வீழ்ந்தான். இது கண்ட திட்டத்துய்மன் வீமனைப் பழித்தான். வீமன், 'எங்கள் குடிப்பிறந்தார் எல்லாம் இறந்தாலும் சங்கரன் நன் மாலைதனைக் கடவோம்' -என்றான்' (பாரதவெண்பா : துரோன பருவம் 13-ஆம் நாட்போர்) இவ் வாறு சிறப்புற்றது கொன்றை. சிவனுக்கே 'கொன்றையாண்டி என்று ஒரு பெயர் உண்டு. கொன்றை முடிக்காத சடையாகச் சிவன் சடையைக் காண முடியாது. கொன்றையை இவ்வாறு சடையில் செருகிக்கொண்ட தால்- வேய்ந்து கொண்டதால் அவருக்குக் கொன்றை வேய்ந் தான்’ என்னும் பெயர் உண்டாயிற்று. - - அவ்வையார் ஆத்தியைச் சூட்டி ஆத்தி சூடி" என்று பெயரமைத்தமை போன்று, கொன்றையை வேய்ந்து கொன்றை வேய்ந்தான்” ஆக்கி அப்பெயரால் 'கொன்றை வேய்ந்தான்' என்னும் நூலையும் வழங்கினார். இந்நூலுக்குப் பிற்காலத்தே "கொன்றை வேந்தன்” என்ற பெயர் மாறலாயிற்று. இக்கருத் தைத் தொல்காப்பிய உரையாசிரியர்கள் தெரிவிக்கின்றார்கள் வெண்செந்துறை என்னும் செய்யுள் இலக்கணத்திற்குச் சான்று காட்டும் பேராசிரியர், - ! #ಣ6 : 5, வாழ்த்து 1, 2. 2 அகம் : க. வாழ்த்து 1, 2,