பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 பூர்ணசந்திரோதயம்-2 இன்ஸ் பெக்டர்:- ஆகா! அப்படியே செய்கிறேன். நான் உத்தரவு வாங்கிக்கொள்ளலாமா? எனக்கு நேரமாகிறது. அவசரமான சில வேலைகள் இருக்கின்றன. ஜெமீந்தார்:-இன்ஸ்பெக்டரே நீர் இந்த விஷயத்தில் மிகவும் சாமர்த்தியமாக நடந்து இவ்வளவு தூரம் உண்மையைக் கண்டுபிடித்ததைப்பற்றி எனக்கு நிரம் பவும் சந்தோஷமாக இருக்கிறது. நீர் இதில் படாத பாடெல்லாம் பட்டு தெய்வச் செயலாக உயிர் தப்பி வந்திருக்கிறீர். அதற்கு எல்லாம் சன்மானமாக நான் உமக்கு இதோ ஒரு பை பணம் தருகிறேன். இதை வாங்கிக்கொள்ளும். இன்னும் நான் இளவரசரிடம் சொல்லி உமக்கு இன்னமும் பெரிய உத்தியோகம் செய்து வைக்கச் சிபாரிசு செய்கிறேன். நீர் போய் இன்றைய ராத்திரி வேலையைப் பாரும். போம் என்று கூறிய வண்ணம் தமது மேஜையைத் திறந்து, அதற்குள் இருந்த பணப் பையை எடுத்து அன்போடு உபசரித்து இன்ஸ்பெக்டரிடம் கொடுக்க, அவர் வேண்டாம் வேண்டாம் என்று மறுத்து உபசார வார்த்தை கூறியபடி அதை வாங்கிக்கொண்டு அவரை வணங்கி உத்தரவு பெற்றுக்கொண்டு, அவ்விடத்தை விட்டு வெளியில் போய்விட்டார். - - பிறகு தனிமையில் இருந்த மருங்காபுரி ஜெமீந்தார் மிகுந்த மனவெழுச்சியும் குதுகலமும் அடைந்தவராய் இன்ஸ்பெக்டர் சொன்ன விஷயங்களில் தமது மனதைச் செலுத்தி எண்ணமிட்டவராக உட்கார்ந்திருந்தார். அவர் தமக்குள்ளாக சிந்தனை செய்யத் தொடங்கி, "சரி; இந்தப் பூர்ணசந்திரோதயம் மகா பொல்லாதவள், போக்கிரித்தனம் நிறைந்தவள். அவள் இளவரசருடைய செல்வத்தையும் செல்வாக்கையுமே பெரிதாக நினைத்து அவரைப் பிடித்துக் கொள்ளத் தீர்மானித்திருக்கிறாள் என்பது நிச்சயம்; அந்தப் பீடையை இளவரசரே கட்டிக்கொண்டு அழட்டும். எனக்கு அவள் வேண்டாம். இவ்வளவு தூரம் காரியம் நடந்தபின் அவளை