பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

308 : உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம் ==

  • தவறானதைத் திருத்துவதற்கு யுத்தம் சிறிதும் ஏற்ற கருவியா யில்லை; அது நஷ்டங்களுக்கு ஈடு பெறுவதற்குப் பதிலாகப் பல மடங்கு நஷ்டங்களைப் பெருக்குகின்றது. அ ஜெஃப்பர்ஸன் * இராணுவ மயமாக்கும் கொள்கையும், யுத்தமும் குழந்தைத் தனமாக இருக்கின்றன. அதைவிடப் பயங்கரமானவையாகவும் இருக்கின்றன. அவை பழங்கால விஷயங்களாக மறைந்து விட

வேண்டும். அ எச். ஜி. வெல்ஸ் * இரகசியமானாலும் சரி. வெளிப்படையானாலும் சரி. யுத்தம் காட்டுமிராண்டித்தனமான முறையாகும். அ மகாத்மா காந்தி

  • மாவினோ அரண்தான் சீக்ஃபிரீட் அரணுக்கு அவசியத்தை உண்டாக்கியது. அ. மகாத்மா காந்தி இரண்டாவது உலகப் போரில் மாவினோ அரண் பிரான்ஸ் நாட்டின் கீழ் எல்லையில் அமைந்திருந்தது. அதற்குப் போட்டியாக ஜெர்மனி தன் மேல் எல்லையில் சீக்ஃபிரீட் அரணைக் கட்டியது) * பலாத்காரத்தையே நம்பி உபயோகிப்பவன், செக்கு மாட்டினைப்

போல, வட்டமாகச் சுற்றிக்கொண்டேயிருப்பான். டி மகாத்மா காந்தி * அச்சமே முதன்மையான தீமையென்று நான் கருதுகிறேன். ஏனெனில், அச்சத்திலிருந்து பூசலும், பலாத்காரமும் தோன்று கின்றன. பலாத்காரம் பயத்தின் விளைவு அது போலவேதான் பொய்யும். அ. ஜவஹர்லால் நேரு * மனிதன் திருந்துவதால் உலக சமாதானம் வரும் என்பதில்லை. ஆனால், புதிய சூழ்நிலைகள், புதிய விஞ்ஞானம். புதிய பொருளாதார அவசியங்கள் ஆகியவை அமைதியை நிலை நாட்டுபவை. அ அனடோல் ஃபிரான்ஸ் * போர் திருடர்களை உண்டாக்குகின்றது. அமைதி அவர்களைத் துக்கில் ஏற்றுகின்றது. அ மாக்கிய வில்லி * யுத்தங்கள் வரும் பொழுது. அவை பொருளுற்பத்தி செய்யும் பெருவாரியான தொழிலாளர் வகுப்பினர்மீது பாய்கின்றன. அவர்களே துயரத்திற்குள்ளாகின்றனர். ையு. எஸ். கிரான்ட்