பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

υ. ιαμοωήυς», ιμβ' ::ς 311 சிக்கனம் நல்லதுதான். அத்துடன் வள்ளன்மையும் சேர்ந்திருக்க வேண்டும். - பென் ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு. அ. திருவள்ளுவர் வறுமை வறுமை கஷ்டமானதுதான் என்பதை நான் அறிவேன். ஆனால், புத்துச் சந்தர்ப்பங்களுள் ஒன்பதில், ஒரு வாலிபனுக்கு ஏற்படக் கூடிய முதன்மையான நன்மை என்னவென்றால், அவனைக் கப்பலிலிருந்து தண்ணீருள் தள்ளிவிடுவதுதான். அவன் மூழ்கினால் மூழ்கட்டும், தானே நீந்திக் கரையேறினால், ஏறட்டும். - νηrή..". "αύ(;) ஏழைக்கு ஏழைகளைத் தவிர இரங்குவோர் சிலரே. லாண்டன் வறுமையால் ஏற்படும் பிணி ஒன்றுண்டு, தேவையினால் அது மனிதனைத் தீமை செய்யத் தூண்டும். - ւէմlւհlա «t» வறுமை, மனிதனுடைய ஊக்கம், பண்பு எல்லாவற்றையும் பறித்து விடுகின்றது. காலியுள்ள பை நட்டமாக நிற்க முடியாது. ஃபிராங்க்வின் கிழிந்த கந்தல் துணிகளின் மூலம் சிறுசிறு கெட்ட பழக்கங்கள் நுழைந்து வந்துவிடுகின்றன. நீண்ட அங்கிகளும், உயர்ந்த உடைகளும் எல்லாவற்றையும் மூடி மறைத்துவிடுகின்றன. - ஷேக்ஸ்பியர் வாணிபம் வாணிபம், எந்தக் காற்றையும் எதிர்த்துச் செல்லும், எந்தப் புயலையும் தாண்டிவிடும். எந்தப் பிரதேசத்திலும் நுழைந்து விடும். அ பாங்க்ராப்ட் விசேஷ அறிவாற்றல்களால் அவன் வெற்றியடையவில்லை. ஆனால், வியாபாரத்திற்கு வேண்டிய அளவு - அதற்கு மேற் போகாத அளவு - திறமை அவனிடம் இருந்தது. அ டாஸிடஸ்