பக்கம்:சீவக சிந்தாமணி (உரைநடை).pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காந்தருவ தத்தை இலம்பகம்39



நாம் அரசன் வணிகன் என்ற பேதம் பாராட்டத் தேவை இல்லை. நாம் உறவினர் ஆகிவிட்டோம்” என்றான்.

தனக்கு மகளோ மகனோ இல்லையே எப்படி உறவு கொள்ள முடியும் என்று சிந்தித்தான்; கொடுக்கல் வாங்கல் இல்லாமல் உறவு எப்படிக் கிடைக்க முடியும் என்று வியந்தான்.

“நமக்குள் கொடுக்கல் வாங்கல்”

“இனித் தொடரப்போகிறது” என்றான்.

“எனக்கு மகன் மகள் யாரும் இல்லையே” என்றான்.

“எனக்கு மகள் ஒருத்தி இருக்கிறாள்”

“இரண்டாவது தாரமா”

“உனக்கு இல்லை;அவளை உன் மகளாக நீ ஏற்றுக் கொள்ளவேண்டும்.”

“என் மனைவிக்கும் ஒரே ஏக்கம்; ஒரு மகள் இருந்தால் எவ்வளவு மகிழலாம் என்று சொல்லுவாள்; நான் கொண்டு சென்ற பொருளைக் கொண்டு புதுப்புது நகைகள் செய்து வைத்துக்கொண்டு எப்படியாவது ஒரு மகளைப் பெற வேண்டும் என்று என்னைத் தொல்லைப் படுத்துவாள்.”

“நீ என்ன செய்ய முடியும்.”

“அதனால் என்னிடம் விரும்பி வருவாள்; நிச்சயம் குழந்தை பிறக்கும் என்று நம்புவாள்; வயிற்றைத் தொட்டுப் பார்ப்பாள், சாப்பிட்ட மாதிரி இருக்கவே இருக்காது; அவள் பசி தீரவே இல்லை.”

“வளர்ந்த மகள் உனக்குத் தருகிறேன்; நீ கொண்டு சென்று தக்கவனுக்குத் தந்து அவனை மருமகனாகக் கொள்க. எனக்கு ஆதரவாக இருக்கும்” என்றான்.

“இவள் விலை போகவில்லையா?”