பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/511

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

491


"முதிர்பூந் தாழை முடங்கல் வெண்டோட்டு” எனச் சிலப் பதிகாரத்தில் (8 : 49) தாழை முடங்கிய மடல் குறிக்கப்பட்டது. இத்தாழை மடலில் செய்தி எழுதப்பட்டு அனுப்பப்பட்டது. எழுதி மடிப்பு விழாமல் வளைத்து முடக்கினர். இதனால் கடிதம் முடங் கல்’ எனப்பட்டது. இதனைப் பொதிந்து அரக்குவைத்து பதிவஞ் சலாக அனுப்புவதை "மண்ணுடை முடங்கல்’’ என்றது. சிலம்பு. எனவே, முடங்கல்’ என்னும் சொல்லும் தாழைக்கே உரியதாக வில்லை. "முண்டகம்’ என்னும் சொல் முள்' என்னும் முதனிலை கொண்டது. அதுகொண்டே, “முள்ளுடை மூலம் யாவும் முண்டக மென்றே சாற்றும் -எனச் சூடாமணி நிகண்டும் பிற நிகண்டுகளும் சாற்றின. இம் முள் தொடர்பிலேயே "தாமரைப் பெயரும் தாழையும் கள்ளும் (கள்ளி) முள்ளுடை முள்ளியும் நெற்றியும் முண் டகம்" 2 - -எனத் தாழையும் முண்டகப் பெயர் பெற்றது. மேலுள்ள அடிகளில் 'முள்ளி’ என்னும் கழி முள்ளிக்கு மட்டும், முள் என்னும் அடைமொழியை அமைந்திருப் பது அதன் முள் தன்மையை வலியுறுத்தவே அதற்கு 'முள்' என்னும் முதல் நிலையில் 'முள்ளி’ என்னும் பெயர் அமைந்திருக் கின்றது. முண்டகம், முள்ளி என்று வரும் இடங்களில் எல்லாம் உரையாசிரியர் நீர்முள்ளி, கழிமுள்ளி’ என்றே பொருள் எழுதினர். தாழையையும் கழிமுள்ளியையும் அடுத்தடுத்துக் கூறவேண்டிய இடங்களில், - "தாழை அன்னம் பூப்பவும், கடுஞ்சூல் முண்டகம் கதிர் மணி கழாஅலவும்'3 e -என்றும், "முண்டகங் கெழி இய மோட்டு மணல் அடைகரை பேஎய்த் தலைய பினர் அரைத் தாழை 4 . -என்றும், கழிமுள்ளியை முண்டகம்' என்னும் பெயரால் குறித்தனர். சங்க இலக்கியங்களில் ஐந்திணை எழுபதில் ஒரிடத்தில் (60 : 2) 1 சூடா, நி : மரம் : 68 : 2. 8 சிறுபாண் 146; 147. 2 பிங், தி : 8971, 4 அகம் : 180 : 4, 5,