பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234


தில்லைச் சிற்றம்பலம் பொன் அம்பலம் எனப்படும். மேற் கூரை பொன்னால் வேயப்பட்டது மட்டுமன்று; பாடலிலும் பொன்பாய்ந்தது. பொன்மன்றம் பொற்றா மரைஒக்கும்; அம்மன்றில், செம்மல் திருமேனி தேன் ஒக்கும்-அத்தேனை உண்டு களிக்கும் களிவண்டை ஒக்குமே எம்பெரு மாட்டி விழி -என்று குமரகுருபரர் பொன் (Dಣೆ! றத்தினைப் பொற்றாமரையாகக் காட்டினார். இவை கற்பனை. மதுரைக் கோயிற் குனம் பொற்றாமரைக் குளம். அதிற் பொன்னாற் செய்யப்பட்ட தாமரை மலர் மிதக்க விடப்பட்டுள்ளது. பானர் பரிசாகப் பொன் தாமரை பெற்றுச் சூடியதை முன்னர் அறிந்தோம். அப்பொற்றாமரைக் குரிய தங்கம் பகைவரை வென்று கைப்பற்றிய யானையின் முக படாத்திலிருந்து எடுக்கப்பட்டது. இவ்வாறு தாமரை பலவகையிலும் கடவுளர் க்கும் அமைந்தது; மாந்தர்க்கும் அமைந்தது. இச் செய்திகளை வழங்கும் நூல்களின் காலங்களை நினைவில் இருத்தி அறிவோடு பொருத்திப் பார்த்தால் ஒர் உண்மை புலப்படும். பண்டைக் கால நூல்களில் மாந்தர் தாமரையைப் பயன் படுத்தியது பல்கியும் பரவலாகவும் பேசப்படும். கடவுளர்க்கு ஆக்கியமை அருகியும் ஆங்காங்கும் பாடப்படும். கால வளர்ச்சி நூல்களில் பையப் பைய இந்நிலை மாறிற்று. மாந்தருக்குத் தாமரை மலிந்தமை போய் மறைந்தும், கடவுளர்க்குத் தாமரை மலர்ந்தமை மலிந்தும் இடம் பெறலாயிற்று. இதற்குக் காரணம் தாமரை தெய்வ மலராக்கப்பட்டமையே. - ஒருகாலத்தில் நீர் வளமும் அதன்வழி ஊர் வளமும், குள வளமும் அதன்வழி நில வளமும் தாமரையால் புலப்பட்டன. வளமான சேறு உள்ள வயலிலும் தாமரை பூத்து வளம் பூப்பதை அறிவித்தது. வளத்தின் அறிவிப்பாகத் தாமரை விளங்கிற்று. இன்று தாமரை அருகிய நிலை, வளம் குறுகியதற்கும் அறிவிப்பு ஆகின்றது. - 1. சித, செ: கோ:18,