பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/348

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

312


மயில் குடுமிப் பூ வாகை மரம்பற்றிய இலக்கிய அடையாளமாகிய "வெண் நெற்று', கவட்டிலை துய்யென்றிருத்தல்' ஆகியனகொண்டு நாம் கானும் வாகையின் பூ முன்னர் குறித்தமை போன்று வெளிர் நிறங்கொண்டது. துய்யென்றிருக்கும். இதழ்க் கம்பிகள் வெண் பட்டு நூல் போன்றவை. வாகைப் பூ வெண்மை என்பதை நிகண்டு ஒன்றில் காண்கின்றோம். 17-ஆம் நூற்றாண்டில் ஆண்டிப் புலவர் என்பவரால் தொகுக்கப்பெற்ற ஆசிரிய நிகண்டு, போர்க்கள ந் தனில் வெற்றி புரிவதே, வாகைவெண் பூவையும் வெற்றியம் பூவென்றி பம்பினரே -எனக் குறிக்கின்றது. இஃது ஒரு சான்றாயினும்-இச்சான்றிற்கு நாம் கண்கூடாக இன்றும் காணும் வாகையின்பூ வெண்மையாயினும்-இதனை உறுதியாக்கப் பெரும்புலவர் மூவரது கருத்துகள் தடைகளாக உள்ளன. சேந்தங் கண்ணனார் என்னும் சங்கப் புலவர், ஒர் இளமை யான தோகை மயிலைக் காட்டுகின்றார். அதன் தலையில் பள பளக்கும் கொண்டையைச் சுட்டுகின்றார். சிறு விசிறி வடிவில் தோன்றும் அதை உவமையாக்கி வாகைப் பூ தோன்றுவதைக் குறிக்கின்றார் ; 'குமரி வாகைக் கோலுடை தறுவி மடமாத் தொகை குடுமியில் தோன்றும்’2 என்னும் அவரது கருத்துப்படி வாகையின் கொப்பில் காணப்படும் வாகைப் பூ மயிலினது குடுமி இறகு போன்று செந்நீல நிறங்கொண்டதா கின்றது. இவ்வுவமையையே, கேசவனார் என்னும் புலவரும், 'வாகை ஒண் பூ புரையும் -ಕತ್ಲ தோகை” என மாற்றுமுறையிற் பாடியுள்ளார். மயிற் கொண்டையின் உவமைப்படி மேற்கண்ட வாகையின் பூ பள பவப்பது. அக்கொண்டையின் வடிவமைப்பைக் கொண்டது. எனவே, இங்கு உருவ உவமையாகக் கொள்ளலாம். - 1. ஆசி, நி 84 : 4 2 குறுந் : 847 : 2,3 8 பரி 14:17, 8.