பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 257 வாங்கிப் படித்துப் பார்த்து அதன் பிறகு ஒருவித முடிவிற்கு வரவேண்டும் என்ற எண்ணம் கொண்டவளாய் வுண்முக துடிவு தனது சஞ்சலங்களை எல்லாம் வெளியே காட்டாமல் அடக்கிக் கொண்டு, புதிதாக வந்த பெண்ணைப் பார்த்துப் புன்னகை செய்ய, அவளும் மகிழ்ச்சியாகவும் இனிமையாக வும் புன்னகை செய்தவளாய் ஊஞ்சற் பலகை யண்டை நெருங்கி வந்து, 'நீங்கள்தான் ஷண்முகவடிவென்ற பெயருடையவர்கள் போலிருக்கிறது?’ என்றாள். அதைக் கேட்ட ஷண்முகவடிவு, 'ஆம். என் பெயர்தான் ஷண்முகவடிவென்பது. இந்த வேலைக்காரியோடு தஞ்சாவூரிலிருந்து இன்னொரு மனிஷியாளை அனுப்பி இருப்பதாகவும், அவர்கள் வசம் ஒரு கடிதம் கொடுத்து அனுப்புவதாகவும் எனக்குத் தஞ்சாவூரிலிருந்து ஒரு கடிதம் எழுதியிருக்கிறார்கள். அந்த மனுஷியாள் நீங்கள் தானோ? உங்களிடம் ஏதாவது கடிதம் கொடுத்து அனுப்பி இருக்கிறார்களா?" என்று நயமாக வினவினாள். அதைக் கேட்ட அந்த யெளவன வடிவழகி, 'ஆம். நானும் அந்த அம்மாளுமாகத்தான் தஞ்சாவூரிலிருந்து வந்தோம். இதோ இருக்கிறது கடிதம். நான் இதை இந்த அம்மாளிடம் கொடுத்துத் தங்களுடைய ஜாகைக்கே அனுப்பிவிடலாம் என்று இப்போதுதான் நினைத்தேன். அதற்குள் நீங்களும் வந்தீர்கள். உங்களைப் பார்த்தது நிரம் பவும் சந்தோஷமாயிற்று. இப்பேர்ப்பட்டவர்களுடைய சிநேகமும் தரிசனமும் கிடைப்பது எளிதல்ல. ஏதோ என்னுடைய நல்ல காலந்தான் இந்தப் பாக்கியமெல்லாம் எனக்குத் தானாகக் கிடைக்கிறது. இதோகடிதம் இருக்கிறது. படித்துப் பாருங்கள். நான்யாரென்ற விருத்தாந்தங்கள் எல்லாம் இந்தக் கடிதத்திலேயே எழுதப் பட்டிருக்கின்றன. நான் எதையும் சொல்ல வேண்டும் என்ற அவசியமே இல்லை. எல்லாம் இதில் எழுதப்பட்டிருக்கிறது" என்று கூறியவண்ணம் தனது மடியில் இருந்த கடிதம் ஒன்றை