பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/586

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

566


பாதிரிப் பூ, கணவனைப் பிரிந்துள்ள தன்னை ஒருமுறை தாக்கியதிலேயே நெஞ்சத்தில் சோர்வை ஏற்படுத்தியதே. தன் கூடையிலேயே இம்மணத்தை வைத்துக் கொண்டு செல்பவள் கணவனை விட்டில் விட்டுப் பிரிந்தன்றோ போகின்றாள். இவளை அம்மணம் எவ்வாறு தாக்குமோ? இரங்கத் தக்கவள். என அவளுக்காக நொந்து கொண்டாள். இதனை, ".... ... ... ... பாதிரி வாலிதழ் அலரி வண்டுபட ஏந்திப் புதுமலர் தெருவு தோறும் துவலும் நொதும லாட்டிக்கு நோம் என் நெஞ்சே' - - எனப் பேசவைத்தார் பாலைபாடிய பெருங்கடுங்கோ, பாதிரிப் பூ குடிநீருக்கும் தன் மணத்தை ஏற்றுவது மலர்ந்த மலரைப் புதிய மண் பானையில் பெய்து வைப்பர் பின்னர் எடுத்து விட்டு அப்பானையில் நீரை ஊற்றிவைப்பர். "ஒண்ணிறப் பாதிரிப்பூ சேர்தலால், புத்தோடு தண்ணிர்க்குத் தான்பயந் தாங்கு" 2 一6T邱T நாலடியார் பாடியபடி இதன் மணத்தைப் புதிய பானை ஒடுவாங்கிக் கொள்ளும். பின்தன்பால் ஊற்றப்பட்ட நீருக்கு ஏற்றும். இவ்வுண் மையை நீலகேசிக் காப்பியமும் பாடியது. பாதிரிப் பூ வாடி அழியும். புதிய பானை ஒடும் உடைந்து அழியும். ஆணுல் அவற்றிலிருந்த பாதிரியின் மணம் ஒன்றிலி ருந்து மற்றொன்றிற்கு இடம் மாறினாலும் அழியாதது போன்று உயிரும் அழிவில்லாதது 3 - என நீலகேசி குண்டலகேசியுடன் வாதிட்டாள். கபிலரும், தேங்கமழ் பாதிரி’ 4 - என இதன் மனத்தைக் 1. நற் ; 118 : 2-5, 2 நாலடி ; 139 -- - 3 ' பாதிரிப்பூப் புத்தோடு பாழ்ப்பினுந்தான் பல்வழியும் தாதுரித்தாங் கேடின்மை' - நீலகேசி : குண்டல : 58. 4 குறி . பா : 74, : -