பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 பூர்ணசந்திரோதயம்-2 பன்றியைக் கட்டித் துக்குவது போல அவளைத் துக்கித் தோள்களின்மீது வைத்துக் கொண்டு ஒற்றையடிப்பாதையின் வழியாகத் திரும்பி மறுபடியும் மடத்தை நோக்கிச் செல்லலாயினர். அந்த முரடர்களது உடம்பு தனது சரீரத்தில் படுவதை சிறிதும் சகியாத அந்தப் பெண்மணி மட்டுக்கடங்கா அருவருப்பும், பயிர்ப்பும் கொண்டவளாய், தனது கைகளையும் கால்களையும் உதைத்துத் தத்தளித்துத் தன்னை விடுவித்துக் கொள்ள முயல்கிறாள். வாயில் துணிப்பந்து திணிக்கப்பட்டி ருந்ததனால் அவளுக்கு மூச்சு ஒழுங்காக வராமல் திணறல் உண்டாயிற்று. வாய் கழுத்து முதலிய இடங்களில் எல்லாம் மரணவேதனையைக் கொடுத்துக் கொண்டிருந்தன. ஆகையால், அவள் கட்டப்பட்டிருந்த தனது கைகளை வாய்க்கருகில் கொண்டு போய்த் துணிப்பந்தை விலக்கிக் கொள்ள எத்தனிக்கிறாள். அந்த முரடர்கள் சிறிதும் தயையின்றி அவளது கைகளையும் கால்களையும் உடம்பையும் இரும்புப் பிடியாக இறுகப் பிடித்து நகரமாட்டாமல் அழுத்திக் கொண்ட வண்ணம், ஒட்டமாக ஒற்றையடிப் பாதையின் வழியாக ஒடுகிறார்கள். வரிசையாக இருந்த ஐந்து மனிதர்களின் தோள்களின் மீது மேல்முகமாக அந்த மடந்தை கிடந்தாள். ஆகையால், அவளது கைகால்களெல்லாம் கீழ்ப்பக்கம் விசையாகத் திரும்பித் திமிறக் கூடாமல் இருந்தன. அந்த மகா பயங்கரமான நிலைமையில் இருந்து வீண் பாடுபட்ட அந்தப் பெண்பாவையின் உணர்வு அநேகமாய்த் தவறிப் போய் விட்டது என்றே சொல்ல வேண்டும். அவ்வாறு தத்தளித்துத் துவண்டு கிடந்த ஷண்முக வடிவைத் தாங்கிய முரட்டு மனிதர்கள் விரைவாக ஓடி ஒற்றையடிப் பாதையின் முடிவை அடைந்து வாய்க்காலிற்குள் புகுந்து ராஜபாட்டையின் மீது ஏறினர். அந்தச் சமயத்தில் திருவாரூர்ப் பக்கத்திலிருந்து இரட்டை மாடுகள் கட்டப்பட்ட ஒரு சவாரி வண்டி விரைவாக ஓடிவந்த ஒசை கேட்டது. எருதுகளின் கழுத்துகளில் கட்டப்பட்டிருந்த சலங்கைகள் ஜல்ஜல்லென்று பிரமாதமாக ஒலித்ததிலிருந்து அந்த வண்டி