பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/326

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

290


"மயிலடி இலைய மாக்குரல் நொச்சி" -எனப் பெயர் புலப்படுத்தாத நற்றிணைப் புலவரும், "மயிலடி யன்ன மாக்குரல் நொச்சி' -என மிளைப் பெருங்கந்தனாரும் மயிலின் காலடியை நொச்சியின் இலைக்கு உவமை கூறியுள்ளனர். மயிலின் காலடி முன் நோக்கிய மூன்று. விரல்களையுடையது. நொச்சிகளில் வெண்ணொச்சி ஐந்து இலை களைக் கொண்டது. அதனால் அதற்கு ஐந்திலை நொச்சி' என்றொரு பெயர் வழக்கும் உண்டு. கரு நொச்சிதான் மூன்று இலைகளைக்கொண்டது. எனவே, கருநொச்சியின் பூவே புறப் பூவாகக் கொள்ளப்பட்டதாகும். . வீட்டு மனையின் சூழலில் நொச்சி இடம்பெற்றதால் இதற்கு மனை நொச்சி', 'மனை இள நொச்சி' என இலக்கியங்கள் மனையின் அடைமொழி கொடுத்தன. வீட்டின் முற்றத்தில் அமைந்த நொச்சி மரத்தில் மெளவல் கொடி படரும், - 'மனைநடு மெளவலொடு ஊழ்முகை அவிழ'3 'மனை இள நொச்சி மெளவல் வால்மு ைக’க -எனப் பல இடங்களில் மெளவற்கொடி இதன்மேல் படர்ந்தமை குறிக்கப் படுவதால் அனைத்து இல்லங்களிலும் இம்மரம் இடம் பெற்றி ருந்தமையை உணரலாம். புறப் பூவாம் இதன்பூ கோட்டுப் பூ. முல்லைத் தொடர்பால் இது காட்டு மரமாகி முல்லை நிலத்தது ஆகும். மருத நிலத்திலும் வளர்வதுண்டு. கார் காலத்தில் இதன் பூவைப் பார்க்கலாம். மெளவலொடு மலரும். "... ... ... ... ... ... ... நொச்சி மனைநடு மெளவலொடு ஊழ்முகை அவிழக் கார்வந் தன்றால்’ -என்றபடி கார்கால மெளவலொடு இதன் முகை அவிழ்ந்து மலரும். எனவே, 1 தற் : 1.15 ; 5 8 நற் : 1.15 : 6 2. குது : 188 : 8 4 அகம் : 21 : 1. o