பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/599

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

579


சிறுழிலைச் سه مس ...، ؟؟ சிலம்பில் கூதளங் கமழும்' என்றும், "... ... ... ... .தயவருஞ் சாசல் - - - கூதள நறும்பொழில்" என்றும் பாடப்புட்டுள்ளமை இது குறிஞ்சி நிலப் பூவெனக் காட்டுகின்றன. - - கார்ப் பருவம் கடந்து கூதிர்ப் பருவத்தில் கூதளி பூத்து மனம் கமழும். - -என்னும் கூற்றங் குமரனார் இதனை, "கதிர்க் கூதளம்' என்றபடி இது கூதிர்ப் பருவப் பூவாகும் இதன் காம்பு 'குறுந்தாட் கூதளி' என்னும் பரணர் தொடர்ப்படி குறுகிய காம்பை உடையது. இக்காம்பில் வெண்மை நிற மலர் பூத்திருக்கும். இது வெண்கூதளம்' எனப்படும். புதர் போன்று வளர்ந்த குற்றில் இவ்வெண்மைப் பு மலர்ந்திருப்பதற்கு, புதரின் கிளையில் வெண்மையான நாரைகுருகு அமர்ந்திருப்பதை உவமையாக்கிப் பரணர், 'பைம்புதல் நளிசினைக் குருகு இருந்தன்ன வன்பிணி அவிழ்ந்த வெண்கூதாளம்' - எ ன்றார். இவ்வுவமையை எடுத்து மொழிவது போன்று அவ்வையார், 'கூதளம் பூவாற் கட்டிய மாலையை வானத்தில் வீசி எறிந்தாற்போன்று பசிய கால்களையுடைய வெண் குருகு தன் சிறகை விரித்து வளைத்துப் பறந்தது' -என்றார். இந்நாரை உவமை மிகப் பொருத்தமானது. இப் பூ வெண்மை அடைமொழி யுடன் பல புலவராற் பாடப்பட்டுள்ளது. இதுகொண்டு செங்க தாளம்' என ஒன்று உண்டு எனக் கொள்ளலாம். சங்க இலக் கியங்களில் இவ்வாறு கொள்ளக் குறிப்பேதும் இல்லை இளங்கோவடிகளார், "விசிமலர் அதிரலும் வெண்கூதாளமும்" என வெண் கூதாளத்தையும் 1 அகம் : 47; 15, 17, 5 அகம் : 178 : 9 2 நற் 318 : 7, 8. 8 அகக்: 273 : 3,2, 3 野岛?244;2 7 சிலம்பு :13:15, 4 குறுந் , 80 !