பக்கம்:அவள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

xviii

 

உறவின் விளைவாய் புவனத்தை ஈன்று இயக்கும் ஆதி சக்தி, தாயில் துவங்கி, பெண்மையின் அத்தனை உறவுகளின் விஹாஸம் அவள்.

ராமகிருஷ்ண பரமஹம்ஸர் கூறும் சத்ய மாயை என்னென்று சற்றே புரிகிறது.

சத்யம் எவற்றிலும் ஊடேயிருந்து கொண்டு அவ்வப்போது தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் தன்மைகளும் பேதங்களும், உருவங்களும், நாமங்களும், கேள்விகளும் ஸ்த்ய மாயை. அவள் சத்தியம் (நீ அவனாய்ப் பார்த்தாலும் சரி, அவளாய்ப் பார்த்தாலும் சரியே! அவனும் அவளே.) ஸ்த்ய மாயா லீலா விநோதினியும் அவளே. ("செல்லக்குட்டித் தாத்தாவிடம் ஏமாப் பாட்டியைப் பாக்குவேன்!")

அவளை உள்நோக்கில் தேட, வியக்க, வியப்பை வளர்க்க, என்றும் அவள் அருகாமையில் நித்யத்வத்தை உணர, ஒவ்வொரு குடும்பத்துக்கும் குலதெய்வம் தேவை. எங்களுக்குப் பெருந்திரு, ப்ரவர்த்த ஸ்ரீமதி, லால்குடி அம்பாள். விக்ரஹத்தைக் காட்டிலும் என்றுமே ஆவாஹனம் மிகப் பெரிது. அதுதான் அவள்.

சாப்பிட்டுக்கொண்டிருக்கிறேன்.

பிறந்த மேனியில், பின்னால் கை கோர்த்துக் கொண்டு, ப்ராசமாய் பாடிக்கொண்டு என்னைச் சுற்றிச் சுற்றி வருகிறாள்.

"சோனாப் பாப்பா நானே!
தங்கப் பாப்பா நானே!
குட்டிப் பாப்பா நானே!
ஜனனிப் பாப்பா நானே!"

மனம் எனக்கு உச்சரிக்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/18&oldid=1495882" இலிருந்து மீள்விக்கப்பட்டது