பக்கம்:அன்பு அலறுகிறது.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 அன்பு அலறுகிறது 'ஏன் அழுதாள்? எதற்காகக் காந்தா என்னைக் கட்டிக் கொண்டு அழுதாள்?' எனக்கு முன்னுல் கின்ற இந்தக் கேள்விகள் இரண்டும் சிறிது நேரத்திற்கெல்லாம் என்னைச் சுற்றிச் சுற்றி ஒலித்தன. பிறகு, எங்கள் அறையைச் சுற்றிச்சுற்றி ஒலித்தன. கடைசியில், காங்கள் இருந்த ஆஸ்பத்திரியையே சுற்றிச்சுற்றி அவை ஒலிக்க ஆரம்பித்துவிட்டன! கான் காதைப் பொத்திக் கொண்டேன்.-ஆமாம் நான் காதை இறுகப் பொததிக கொண்டேன். ஒய்ந்தது; என்னையும் என் இதயத்தையும் சித்திரவதை செய்து கொண்டிருந்த அந்த ஒலி கொஞ்சங் கொஞ்சமாக ஓய்ந்தது. எடுத்தேன்; காதைப் பொத்திக் கொண்டிருந்த கையை எடுத்தேன. 'அடாடா, அதற்குள எழுந்துவிட்டாளே!” என்று யாரோ ஒருவர் அசுவாரஸ்யத்துடன் சொல்லும் குரல் என் காதில் விழுந்தது. திரும்பிப் பார்த்தேன்; அசடே உருவான என் அத்தான் என்னை நோக்கி வந்து கொண்டிருந்தார். ஒருவேளை என்னையும் என் ஆன்மாவையும் பிடுங்கித் தின் னும் கேள்விகளுக்குப் பதில் இவருக்கும் தெரிந்திருக்கலாமல்லவா? தெரிந்தால இவராவது என்னிடம் அதை ஒளிக்காமல் சொல்லலாமல்லவா? இந்த எண்ணம் எழுந்ததும், வாருங்கள், அத்தான்!” என்று அவர் எதிர்பாராத வரவேற்பை கான் அவருக்கு எதிர்பாராதவிதமாக அளித்தேன்.