பக்கம்:அலைகள்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முள் O 83

 கொண்டவனையே, 'கருடா சுகமா” என்று கேட்பார்கள். சில பேர்- சில பேருக்குச் 'சில பேர், பல பேர், பொது’ என்று சொல்லிக்கொண்டு ஒருத்தரையே குறிப்பதுதான் வழக்கம்.

"ரொம்ப Correct! உலகத்தில் பொது என்று இல்லா விட்டால்; அவரவர் காய்ச்சல் எரிச்சல்களைத் தீர்த்துக் கொள்வதோ, நாலு பேர் கண்படக் காற்றாடுவதோ எப்படி? ஆகையால் எல்லாமே ஒன்றைக் குறிப்பதுதான்."

"சிலர்?”

“சிலர் என்றாலும் அதேதான்.”

"பலர்?"

“பலர் என்றாலும் அதேதான்".

"அப்போ ஒன்று?’’

‘ஒன்று என்றால் ஒன்றேதான். அன்று இன்று, என்றுமே ஒன்று.'

"எது?’’

'அது இது எது எல்லாம்-'

"இதென்ன திடீர்னு பாஷையே மாறி, கழிச்சு, விஷயமே சூழ்ச்சியாப் போச்சு! மயிர் சிலிர்க்கிறது; என்னது இது எது அது?”

‘திரும்பிப் பார்-'

"யார்? ஒ, இதான் சித்தியா? சித்தி, நில் அப்படியே, திசைமாறாமல், நமஸ்காரம் பண்ணுகிறேன். தடுக்காதே, நான் உனக்குப் பெண்; என்னைப் பெற்றவளை எனக்கு ஞாபகமில்லை. என் சித்தியையாவது பார்க்கிறேன். எங்கே, கொஞ்சம் வெளிச்சத்தில் திரும்பு-உன் பேர் என்ன? என் பேர் விமலா...நீ பலே கைக்காரப் பேர்வழி, அப்பா! ஓசைப் படாமல் ஊமை மாதிரியிருந்து கொண்டு, 'லக்கி பிரைஸ்'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/85&oldid=1288234" இலிருந்து மீள்விக்கப்பட்டது