பக்கம்:அலைகள்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

182 O லா. ச. ராமாமிருதம்

'



வாங்குகையிலேயே எத்தைையோ பிடிப்புகள்.

வரும் வழியிலேயே அதற்குமேல் பட்டுவாடா.

அத்தோடு, தங்கை கலியாணத்துக்கு வாங்கின கடனுக்கு வட்டியைச் செலுத்திவிட்டு- கடனடையு. முன்னரே தங்கை வீடு திரும்பியாச்சு - மிச்சத்தை அம்மாவிடம் கொண்டு போய்க் கொடுத்தால், “நீயே வெச்சுண்டு இந்த மாசம் நடத்து, எனக்கென்னடா, ஒரு வேளை சோறு. கிருத்திகையும் ஏகாதசியும் வந்தால் அதுவும் போச்சு!” என்கிறாள்.

ஜயராமின் படிப்பு, முக்கியமாய் கணக்கு-எப்பவும் அவசர சிகிச்சையிலேயே நிற்கிறது. டியூஷன் வாத்தியார் சொல்கிறார் : "நான் வெளிச்சமாகவே சொல்கிறேன். இந்த வருஷம் கேள்வித்தாளைக் குறிக்கும் சான்ஸ் எனக்கு வந்தால் உங்கள் பையனுக்கு மாத்திரம் ’அவுட்' பண்ணி விடுகிறேன். ஆனால் அப்படியாவது அவன் எழுதுவானோ? எனக்கே கேள்வியாயிருக்கிறது. நீங்கள் என்ன சொல்கிறீர்?"

இந்து (ஒ sorry, மிஸ் இந்துமதி) கான்வெண்டில் படிக்கிறாள். வகுப்பு என்னவோ சின்னதுதான். ஆனால், மாதம் ஒரு உடை, உடைக்கேற்றபடி செருப்பு மாறிக் கொண்டேயிருக்கிறது. பள்ளிவிட்டு “டக்டக்" கென்று மாடியேறி வரும் சப்தம் கேட்கப் பெருமையாத்தானிருக்கிறது.

ஆனால் கட்டுபடிதான் ஆகவில்லை.

ரமணி ஒரு நோஞ்சான்,

போன வருடம் சங்கராந்தியன்று இஸபெல்லா ஆஸ்பத்திரியில் மூக்கில் குழாயுடன் படுத்திருக்கிறான். ஸிஸ்டர் தெரிஸ்ஸா, கரண்டியில் மருந்தைக் கரைத்துக் குழந்தைக்கு ஊட்டுகிறாள்.

“My darling!"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/184&oldid=1290261" இலிருந்து மீள்விக்கப்பட்டது