பக்கம்:அலைகள்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

92 O லா. ச. ராமாமிருதம்



தீபாவளிப் புடவை மடியில் பார்த்ததைவிட உடுத்திக் கொண்ட பின்னர்தான் எனக்கு எவ்வளவு பாந்தமாயிருக்கிறதென்று தெரிகிறது. இந்தப் பாந்தம், வெறும் என் தோலின் சிவப்போடும் சதைமேல் துணி படும் அனுபவத்தோடும் மாத்திரம் இல்லை: மனசுள் புகுந்து அதன் ஆழத்தோடு இழையும் சக்தி அதற்கு இருக்கிறது என்றால் நீங்கள் நம்புவீர்களோ? புடவையின் தரத்தைச் சொல்லவரவில்லை; அதை இழுத்துப் பிடித்துப் பார்த்துக் கண்டுகொண்ட இழை நயத்தைச் சொல்லவில்லை; தலைப்பு ஜரிகையைச் சொல்லவில்லை; அதன் நிறம்-என் ஹ்ருதயத்தில் அதன் ஆஹாய நீலம் இன்னும் அடித்துக்கொண்டிருக்கிறது. நீங்களும் வந்தேள் .

“ஏன் புன்முறுவல் பூக்கறேள்? நான் கவியாகிவிட்டேன் என்றா? நானா பேசறேன்? அந்த ஆகாய நீலம்னா பேசறது. அவ்வளவு தனி சாமர்த்தியம் எல்லாம் எனக்கு ஏது? எனக்கு எதுக்கு? இந்தத் தோட்டத்தில், இதோ நீங்கள் கல்மேடையில் உட்கார்ந்திருக்கிறீர்கள்; உங்கள் காலடியில் நாய்போல் நான் உட்கார்ந்திருக்கிறேன். இதைவிடப் பதவி எனக்கு வேண்டாம். இதுவே என் ஆனந்தம். நான் என்னை இழிவு படுத்திக்கொள்ளவில்லை, என் நன்றியை எப்படி உங்களுக்குத் தெரிவிப்பது?

"உங்கள் முகம் ஏன் சுளிக்கிறது? ஒஹோ, புரிஞ்சுது! நான் நன்றி என்கிற போதெல்லாம் உங்களுக்குப் பிடிக்கவில்லை. வேறென்ன சொல்லவேண்டும் என்கிறீர்கள்? பேச மாட்டேன் என்கிறீர்களே, சொன்னால்தானே தெரியும்?-- ஊம் ஜாக்கிரதை; கையில் திருகிக்கொண்டிருக்கிறீர்களே; மறுபடியும் பொக்கப் போறது. இப்பவும் முள்ளோடுதான் பறித்துக்கொண்டு வந்திருக்கிறேன். இந்தப் பூதான் என் அடையாள பாஷை. முள்ளில்லாது இதைப் பறிப்பதில், இதன் பாஷைக்கு அர்த்தமில்லை.

"சரி, சரி; நீங்கள் சொல்லாமலே புரிஞ்சு போச்சு, நான் ஆசை, அன்பு, ரத்தத் துடிப்பு, வெறி என்கிற பாஷையைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/94&oldid=1288250" இலிருந்து மீள்விக்கப்பட்டது