பக்கம்:அலைகள்.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அலைகள் O 217


சின்னதுன்னு நினைக்காதே ஷாமி, இது எங்கள் ஷத்தியம். ஷாயங்காலமோ, காலையிலோ ஒரு மான்தோல் கொண்டு வந்து உன்கிட்டே கொடுத்துட்டு பாஷி மணியை மீட்டுப் போவோம். என்னவோ நினைக்காதே. நாங்கள் பொய் சொல்லுவோம், ஷத்தியம் வைப்போம். ஆனால் சொன்ன சொல் தவறமாட்டோம். நினைப்பிலே வெச்சுக்க. நாங்க தேசிங்கு ராஜா வம்சம்-வரோம் சாமி-"

மாலை வருகிறது.

ஒருத்தருக்கும் தெரியாமல், அந்த பாசிமணியைப் பனியனுக்கடியில் அணிந்து கொண்டிருக்கிறேன்.

மறுநாள் காலை வருகிறது,போகிறது.

ஒருவாரம் ஆகிறது.

"இவன் பெண்சாதி உன் தங்கச்சி மாதிரி!"

நள்ளிரவில் தட்டியெழுப்பினாற்போல் விழித்து கொள்கிறேன்.

கழுத்தைப் பாம்பு சுற்றிக்கொண்டாற்போல், ஒரு பயங்கரச் சில்லிப்பு.

இம்மாதிரி எத்தனையோ பொய் சத்தியங்களை விழுங்கிவிட்டு-அதுவே ஒரு தனி உயிர் பெற்றுவிட்டதோ?

பயவெறியில் அப்படியே கழுத்தினின்று அறுத்து ஜன்னல் வழி வீசி எறிகிறேன். மீது நேரத்துக்கு சரியாகவே தூக்கம் வரவில்லலை. அது யாரையாவது கடித்துவிட்டால்?

விடிந்ததும் குழிதோண்டி, யாரும் கண்காணாது அதைப் புதைத்து விடவேண்டும்.

ஆனால் மறுநாள் அது விழுந்த இடத்திலும் தோட்டம் முழுதும் சல்லடையோட்டுச் சலித்தும் அது கிடைக்கவேயில்லை, வெகுநாள் அது மறைந்த கிலேசம் மனதை உறுத்திக்கொண்டேயிருந்தது.

பிறகு ஒருநாள் மாலை ஆபீஸிலிருந்து சைகிளில் திரும்பி வருகையில் இரும்பு வாராவதி ஒரத்தில் இரண்டு பேரையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/219&oldid=1285559" இலிருந்து மீள்விக்கப்பட்டது