பக்கம்:அலைகள்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எங்கிருந்தோ வந்தேன் O 165



சோத்து வத்தல்

வறுத்த முளகா

அப்பளப்பூ

கிச்சிலிக்கா ஊறுகா

இன்னும் ஒண்ணு ரெண்டு பேர் தெரியாது; இதுவரை கண்ணால் கண்டது கூட இல்லை.

இன்னிக்கு ஏதாச்சும் விசேடமா? தினத்திக்கே இவங்க இப்படித்தின்னா கட்டுபடி ஆவுமா? வவுறு ஜரிக்குமா? இல்லே இதெல்லாம் எனக்காவா?

மல்லிப்பூவாட்டம் சோறு இலையிலே புலுபுலுன்னு ஆவி பறக்குது. பரபரன்னு-அண்ணின்னு எண்ணறேன் விசிறியெடுத்தாந்து விசிர்றாங்க எனக்குக் கண்ணுலே சதை பிடுங்கிக்குது.

இம்மாம் பொருட்டா நான்?

ஏன் இங்கே வந்தேன்?

இவங்க ஏன் இப்படி என்னை வதைக்கறாங்க?

கண் கசக்கவுமுடியல்லே முழிக்கவுமுடியல்லே. முழி நீஞ்சுது. பாத்துாடுவாங்களோ? முக்கு உறிஞ்சுது.

மேலேருந்து அவன் சிரிக்கிறான். மேலே இனக்கம் கண்டிருக்குது. இளநீரிலே வழுக்கைத் தேங்காய்த் தேசலாட்டம் நிலவு மிதக்குது.

“ அப்பவே சொன்னேனே கிணத்துத் தண்ணி ஜீதளம். ஜளிப்பு எப்படிப் புடிச்சிக்கிட்டுது பார்த்தீங்களா?”

சின்னவர் வேறே நெஞ்சுலே தூண்டிலை மாட்டி இழுக்கிறாரு.

இலையை இப்படி நிறையக் கண்டாலே வவுறு அடைச்சுப் போவுது. மேலும் இவங்க மேலும் மேலும்

அ.-11

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/167&oldid=1288554" இலிருந்து மீள்விக்கப்பட்டது