பக்கம்:அலைகள்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

104 O லா. ச. ராமாமிருதம்

 "ஒஹோ, கண்டெடுத்த குண்டு முத்தாக்கும்! காசின் மேல் ஆசையில்லையாக்கும்! காப்பி என்றால் உசிராக்கும்! எனக்கு இப்போ ஞாபகம் வருகிறது. எங்கள் ஊருக்கு ஒரு சாமியார் வந்தார். காஷாயம், மொட்டைத் தலை எல்லாம் சரி. அவருக்கு சாப்பாடுகூட வேண்டாம், வாசற்குறட்டின் மேல் ஒரு கால், படிமேல் ஒருகால், இடுப்பில் ஒருகை ஊன்றி அதிகாரமாய் நிற்பார். சிவத்துக்கு ஒரு டம்ளர் பால் அகப் படுமா?’ என்பார். அவரோட பாதக்குறட்டின் சப்தம் கேட்டாலே எல்லோரும் ஒடி ஒளிவார்கள். பாவம், எல்லோருக்கும் பயிர்த் தொழில். காலையில் தண்ணுஞ் சோறு, மத்தியான்னம் மாவு சாதம், இரவு அடுப்புப் புகைந்தால் அதிகம்! பாவம், பாலுக்கு எங்கே போவார்கள்? சரி சாமான்கள் ஜாக்ரதை, சொல்லிவிட்டேன். எங்களுக்கெல்லாம் இப்படி வேலை கிடைத்துவிட்டால், நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் ஏன் தலை காட்டும்?”

“இந்த இடக்குப் பேச்சைத் தவிர உங்களிடம் என்ன கண்டது? உங்கள் கூட்டமே சந்தேகக் கூட்டம்தானே?”

தோசையில் கடிபடும் சுண்டைக்காய்போல் 'தறுக்தறு'க் கெனும் பேச்சு, மண் கூஜாவிலிருந்து கொட்டும் ஜலம்போல் கிளுகிளுக்கும் குரல். நின்ற இடத்தில் நிற்காததோர் கீர்த்தனம்.

ஆண்டாளு கண்டிராத படம் கிடையாது. 'ஸ்டார்’களின் குடும்ப வரலாறு அவர்கள் நடித்திருக்கும் படங்களின் ஜாபிதா. அவர்களைப்பற்றி அக்கப்போர் அத்தனையும் அவளுக்கு அற்றுப்படி.

எங்குமே மூவர் கூடில். இருவர் ஒன்று சேர்ந்து கொண்டு மூன்றாமவனைத் தாக்குவர். ஆண்டாளு சுசிக்கு சரியான பக்கபலமானாள். ஆண்டாளு வேளிப்படையாய்க் கஷி கட்டினாள். இருவரிடையிலும் குறுக்கே விழுந்து கலக மூட்டினாள் என்று அர்த்தமல்ல. அவள் அவர்களிடையில் புகுவதுகூட இல்லை. ஆனால், சம வயதில் தன் பக்கம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/106&oldid=1288261" இலிருந்து மீள்விக்கப்பட்டது