பக்கம்:அலைகள்.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

210 O லா. ச. ராமாமிருதம்


போனாலும் நான் ஆச்சரியப்படமாட்டேன். என் வயதில் நான் எதற்கும் ஆச்சரியப்படலாகாது.

ஆனால் அந்தக் குட்டி சொன்னமாதிரி பொழுது சாய்ந்துதான் போச்சு. கொட்டிய மசிபோல் மேகங்கள் அலைகள் தாண்டிய கடலமைதியில் இறங்குகின்றன. இன்றிரவின் இருள் அங்கு பிறந்து கரைநோக்கிப் புறப்பட்டாச்சு, இன்றையக் கிறுக்கல்களை யழித்து. நாளையப் பாடத்திற்குக் கரும் பலகையைத் தயாராக்குவதுபோல், பூமியைத் துடைக்க இரவு புறப்பட்டாச்சு. கறும்பலகையின் சுத்தம் அதன் கறுப்பில்தான். இ ரு ளு க் கு த் தக்கபடிதான் அதினின்று புறப்படும் ஒளி. அது வருகையிலேயே, அலைகள் கடலில் தம் இடைவிடா ஸ்னானத்தில், அதைத் தம்மிடம் இழுத்து. சேலையாய் அவசரச் சுற்றாய்த் தம்மேல் சுற்றிக் கொள்கின்றன. அவைகளின் மேடு தாழ்வு, என் கண்ணுக்கு மூடாந்தமான நிழல்களாகின்றது. உருவக் கோடுகளின் உள் அடைப்பில் தெரியும் வெறும் இருளின் இடையே அவ்வப்போ அலையின் வெண்நுரையோட்டம், கறுப்புப் புடவையில் வெள்ளி சரிகைபோல் ஒளி விட்டுவிட்டுக் காட்டுகின்றது.

அலைகளின் ஓயாத ஒசைக்கு என்செவி புதிதாய் விழித்துக் கொள்கின்றது. அம்முழு முழக்கத்தினின்று வித விதமான ஓசைகள் பிரிந்து வந்து, பாகுகூட்டி, என் நெஞ்சில் தந்தி அமைத்து இசைமீட்டலில், நான் புரிந்தும் புரியாததும், அறிந்தும் அறியாமலும் நினைவில் புதைந்த அருவங்கள், கதிர் முளைத்து எழுகின்றன.

அவசரத்தில் நான் ஸ்திரீகளின் ஸ்னானத் துறையில் இறங்கிவிட்டேன் போல். என்னைச் சுற்றி வெட்கம் கலந்த வெற்றிச்சிரிப்புகள், கேலிக் கொக்கரிப்புகள், சீற்றச்சீறல்கள் விரட்டலுடன் அழைப்பு கலந்த கூவல்கள், நீண்ட பெருமூச்சுகள், எல்லாம் ஒருங்கே நினைவில் அலைமோதுகையில் குழலினின்று ஜலமெனச் சிரிப்பு என்னின்று பீச்சியடித்து, என் நினைவு ஒட்டுக் கேட்குங் அரவங்களுடன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/212&oldid=1285548" இலிருந்து மீள்விக்கப்பட்டது