பக்கம்:அன்பு அலறுகிறது.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 அன்பு அலறுகிறது பெண்ணே-அதாவது, பலவீனம் மிக்க பணக்காரன் ஒருவனைக் கல்யானம் செய்து கொண்டு தானும் பணக் காரியாகிவிடட பெண்ணை-காதலால் அவ8ளயும் வாழவைக்க முயன்று, தன்னையும் வாழ வைத்துக் கொள்ள முயல்வதில்தான் இருக்கிறது!”

அந்தப் புரட்சிகரமான காதலை அவள் உங்கள் மேல் கொள்ளாமலிருந்தால்?”

அைவள் கொள்ளாமலிருந்தால் என்ன, அவள் முகந்தான் எங்களைப் பார்க்கும் போதெல்லாம் காதல் கொள்கிறதே!” - அகம்?’’ அதைப்பற்றி காங்கள் அவ்வளவாகக் கவலைப் படுவதில்லை!” ஆமாம். அவள் முகம் உங்களைப் பார்க்கும் போதெல்லாம் காதல் கொள்கிறதென்று உங்களுக்கு எப்படித் தெரிகிறது?’’ விரிந்து பரந்துப் பெருகி வழியும் கற்பனையில் தான்!” உைங்கள் கற்பனைக்காக அவள் தன் கற்பை இழந்து விட வேண்டுமா?’’

இழக்காவிட்டால் அன்புப் புரட்சி செய்வது எப்படி?’’

அதனுல்தான் மனைவிக்குக் கணவனைத் தவிர ஒரு துணைவனும், கணவனுக்கு மனைவியைத் தவிர ஒரு துணைவியும் வேண்டும் என்கிறீர்களா?”