பக்கம்:அலைகள்.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

"தெறிகள் O 249"



போல் கோகர்ணத்திலிருந்து பாயஸம் இறங்குவதைப் பார்த்துக் கொண்டிருக்கையிலே ‘குப்' பென்று விளக்குகள் அணைந்தன.

மின்சாரம் திரும்பவில்லை.

கைகாயக் காத்திருந்ததுதான் மிச்சம்.

பெட்ரோமாக்ஸு'க்கு எவனோ ஒடினான். போனவன் திரும்பவில்லை. அப்படியே ரயிலேறி விட்டானா என்று பந்தியில் எவனோ கிண்டல் பண்ணினான்.

பிறகு எந்தப் புண்ணியவானுக்கு யோசனை தோன்றிற்றோ தெரியவில்லை. அவசரமாய்ப் பக்கத்துக் கடையிலிருந்து மெழுகுவர்த்திகள் வாங்கி வந்து விநியோகம் ஆயின. ஒரு வழியாய் சாப்பாடு முடிந்து இலையிலிருந்து எழுந்தோம். ஆனால் மனதுக்குத் திருப்தியில்லை. ருசி கெட்டுவிட்டது. வயிறு நிறையவில்லை. அதனாலேயோ, அதற்கு முன்னாலேயோ நடுப்பந்தியில், நடுக்கூடத்தில் விளக்கு அணைந்துவிட்டதாலோ, மனநிறைவில்லை.

கிணற்றடியில் கைகழுவ 'க்யூ' நின்றது. இடையிடையே மெழுகுவர்த்திகளின் ஒளித்தெறிப்புக்கள், 'லைன்' மாறிக் கொண்டிருக்கும் ரயில் வண்டித் தொடர் போன்ற 'க்யூ'வின் வளைவைக் காட்டின.

எனக்கு முன்னால், கலியாணப்பெண ஒரு வர்த்தியைப் பிடித்துக் கொண்டு நின்றாள். அவளுக்கு முன் கலியாணப் பிள்ளை,

இந்தப் பந்தியிலேயே அவள் ஒருத்திதான் பெண்.

திடீரென்று கலியாணப்பிள்ளை துள்ளிக் குதித்தான்.

“என்ன? என்ன?’’-எல்லோரும் பதறினர்.

"ஒன்றுமில்லை"-ஏந்திய எச்சிற்கையில் முழங்கையை மறுகையால் பரபரவென்று தேய்த்துக் கொண்டான்.

“சொல்லேண்டா!" -ஒரு கிழவர் பொறுமையிழந்து கத்தினார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/251&oldid=1286369" இலிருந்து மீள்விக்கப்பட்டது