பக்கம்:அலைகள்.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

234 O லா. சா. ரமாமிருதம்


இலைப் பழுப்படியில் மறைந்து கிடைக்கும் பாம்பு போல், நெஞ்சடியில் உறைந்து கிடந்தாள்.

இருவரும் இளைப்பாறினோமோ?

இப்போ “ஜூட்" இல்லை.

அம்பேல்.

ன் உத்தியோகம் என்னை எங்கெங்கோ கடத்திச்சென்றது. சிக்காமுவையும் குழந்தைகளையும்கூட பிறந்த வீட்டில் விட்டுவிட்டு வேலை இழுத்த வழி அலைந்தேன்.

பிறகு ஒரு நாள், நெடுநாள் கழித்து ஊர் திரும்பினேன்.

நான் முன்னால் எழுதவில்லை. திடுமென முளைப்பதில் ஒரு குஷி.

வீட்டுப்படி மிதிக்கையில், விளக்கு வைத்தாகிவிட்டது. ரேகை மறையும் சமயம்,

"சிக்காமூ! டேய்பாலூ, வெங்கட்டு!"

யாருமேயிருப்பதாய்த் தெரியவில்லை. திண்ணை சாய் மணைமேல் அகல்விளக்கை ஏற்றி வைத்துவிட்டு, வாசற் கதவையும் திறந்து போட்டுவிட்டு, கிராமத்தில் இங்கே தான் இப்படி 'ஹாய்யா' போக முடியும். பட்டணத்தில் இந்த ஜம்பம் பலிக்குமா?

கூடத்தில் கைப்பெட்டியை இறக்கினேன்,

“யாரது? அத்திம்பேரா. அடாடா! வாங்கோ வாங்கோ-! நில்லுங்கோ நமஸ்காரம் பண்றேன்.”

கோயில் ஆராய்ச்சிமணி என்மேல் தீர்க்கமாயிறங்குகிறது. புதுப்புடவையின் சலசலப்பு. அவள் நமஸ்கரித்து நிமிர்ந்து எழுகையில், காற்றில் மிதக்கும் லாந்தர் அடியில் சூழ்ந்த இருளில், மூக்குத்தியின் பச்சை பளிரிடுகிறது. கண்களை இருகைகளாலும் இறுகப் பொத்திக் கொள்கிறேன். தரிசனத்தின் தேஜஸ் தாங்க முடியவில்லை. கண்ணுள் நீல

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/236&oldid=1285675" இலிருந்து மீள்விக்கப்பட்டது